இலங்கையில் உச்சம் தொட்ட ‛காஸ்' விலை

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
கொழும்பு-இலங்கையில் சமையல் 'காஸ்' சிலிண்டரின் விலை, 90 சதவீதம் உயர்ந்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் துவங்கியபோது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதனால் பால் பவுடர், எரிபொருள், கோதுமை மாவு,

கொழும்பு-இலங்கையில் சமையல் 'காஸ்' சிலிண்டரின் விலை, 90 சதவீதம் உயர்ந்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



latest tamil news


நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் துவங்கியபோது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதனால் பால் பவுடர், எரிபொருள், கோதுமை மாவு, சிமென்ட் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.க

கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.இந்நிலையில் சமையல் காஸ் சிலிண்டரின் விலை வரலாறு காணாத அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது. கடந்த 8ம் தேதி நிலவரப்படி, 12.5 கிலோ எடையிலான சிலிண்டர், 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


latest tamil news


தற்போது 1,257 ரூபாய் உயர்ந்து 2,657 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு கிலோ பால் பவுடர், 250 ரூபாய் உயர்ந்து, 1,195 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், நாட்டு மக்கள், அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sharma - colombo,இலங்கை
12-அக்-202116:28:57 IST Report Abuse
Sharma மஞ்சள் தூள் ஒரு கிலோ 6000 இலங்கை ரூபாய். இந்திய மதிப்பில் 2600ரூபாய் . கடத்தல் வியாபாரம் கொடி கட்டி பறக்குது
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
12-அக்-202116:06:13 IST Report Abuse
பாமரன் ///...கடந்த 8ம் தேதி நிலவரப்படி, 12.5 கிலோ எடையிலான சிலிண்டர், 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 1,257 ரூபாய் உயர்ந்து 2,657 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.../// இந்திய ரூபாய்க்கு எதிரா இலங்கை ரூபாய் மதிப்பு 2.65 அதாவது 1 INR = 2.65 SL rupee... அதாவது சிலிண்டரின் தற்போதைய விலை இந்திய ரூபாயில் ஆயிரம் ... இதே இரண்டு வாரங்களுக்கு முன் சிலிண்டர் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ஐநூறுக்கும் கீழே இருந்தது... நம்ம திறமை அவங்களுக்கு வருமா... நாம அந்த லெவலில் இருந்து விலையேற்றி ஆறு மாசத்துக்கு மேலாச்சு...
Rate this:
Cancel
12-அக்-202115:00:12 IST Report Abuse
ஆரூர் ரங் கடந்த 2020 முதல் இதுவரை உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை நான்கு முதல் ஆறு மடங்கு😪 அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் எல்லா நாடுகளிலும் இருக்கும்
Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
12-அக்-202116:08:23 IST Report Abuse
பாமரன்அய்யா அறிவாளி ரங்கீடு... இயற்கை எரிவாயு மற்றும் LPG ரெண்டுமே வெவ்வேறானவை... சம்பந்தமில்லாதவைன்னு உமக்குக்கூடவா தெரியாது??? உம்மை போயி அறிவுவாளின்னு நினைச்சது எங்க தப்பா...???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X