ஆசிரியை மீது தாக்குதல் பிரபல ரவுடி சிக்கினார்

Added : அக் 12, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் அருகே அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய வழிப்பறி கும்பலை சேர்ந்த பிரபல ரவுடியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.புதுச்சேரி வேல்ராம்பட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி செங்கொடிபாரதி (37). விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி

வில்லியனுார் : வில்லியனுார் அருகே அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய வழிப்பறி கும்பலை சேர்ந்த பிரபல ரவுடியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி வேல்ராம்பட்டை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி செங்கொடிபாரதி (37). விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், சித்தலம்பட்டு அரசு பள்ளி வாக்குசாவடியில், தேர்தல் அதிகாரியாக பணி யாற்றினார். பணி முடிந்து, 6ம் தேதி நள்ளிரவு வழுதாவூர் வழியாக, கணவருடன், மோட்டார் சைக்கிளில் சென்றார்.பிள்ளையார்குப்பம் அருகே வழிப்பறி கும்பல் தாக்கியதில் செங்கொடிபாரதி காயமடைந்தார். இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீசார், தேங்காய்திட்டை சேர்ந்த பிரபல ரவுடியை பிடித்தனர்.விசாரணையில், ஆசிரியை செங்கொடிபாரதியை தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த ரவுடி மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி யில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X