மாமூல் கேட்டு பார் உரிமையாளர் மீது தாக்குதல்; ஊழியர் கடத்தல் மூன்று ரவுடிகள் உட்பட 5 பேர் கைது

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மாமூல் கேட்டு மதுபான பார் உரிமையாளரை தாக்கி பணம் பறித்துக் கொண்டு, ஓட்டல் ஊழியரை கடத்திச் சென்று தாக்கிய 3 ரவுடிகள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி மணக்குள விநாயகர் வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 31; வெள்ளாழர் வீதியில் தனியார் மதுபான பார் மற்றும் ஓட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, மதுபான பாரில்


புதுச்சேரி : மாமூல் கேட்டு மதுபான பார் உரிமையாளரை தாக்கி பணம் பறித்துக் கொண்டு, ஓட்டல் ஊழியரை கடத்திச் சென்று தாக்கிய 3 ரவுடிகள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 31; வெள்ளாழர் வீதியில் தனியார் மதுபான பார் மற்றும் ஓட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, மதுபான பாரில் கோவிந்தசாலை, கண்டாக்டர் தோட்டம், அரசு குடியிருப்பை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ், 28, மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர், ரூ. 1600க்கு மதுபானம் குடித்துள்ளனர்.பணம் கேட்ட பார் உரிமையாளர் ராஜேஷ்குமாரை தாக்கி, அவரது பாக்கெட்டில் இருந்தரூ.1000 பணத்தையும் பறித்துக் கொண்டனர்.பின்பு, 'ஒவ்வொரு மாதமும் வருவோம். எங்களுக்கு மாதம் ரூ. 5,000 மாமூல் தர வேண்டும், இல்லாவிட்டால் வெட்டி கொலை செய்து விடுவோம்' என மிரட்டிச் சென்றனர்.இது குறித்து பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி சென்றனர். இதை அறிந்த விக்கி மற்றும் கூட்டாளிகள், மீண்டும் அந்த ஓட்டலுக்கு வந்தனர்.வரவேற்பு அறையில் இருந்த திவான்,18; என்ற வாலிபரை அடித்து உதைத்து, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றனர்.

அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையின் பின்புறம் கொண்டு சென்று, மாத மாமூல் தர வேண்டும் என கூறி, கற்களால் தாக்கினர்.தாக்குதலில் காயமடைந்த ராஜேஷ்குமார், திவான் ஆகிய இருவரும், அரசு பொது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.எஸ்.பி., ரட்சனாசிங் தலைமையில், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து, விக்கியை கைது செய்த விசாரித்தனர்அதில், கோவிந்தசாலை கல்வே பங்களா மெயின் ரோடு ரவுடி ஜெய்(எ) ஜெயக் குமார், 26; குபேர் நகர் ரவுடி அருண் (எ) சோனி, 28; கென்னடி நகர் நாகராஜ் (எ) பாம்பு நாகராஜ், 28; கண்டாக்டர் தோட்டம், அரசு குடியிருப்பை சேர்ந்த முகேஷ், 19; ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதையடுத்து, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.கொரோனா பரிசோதனைக்கு பிறகு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க உள்ளனர்.எஸ்.பி., ரட்சனா சிங் கூறுகையில்; 'சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விக்கி மீது ஒரு கொலை, அடிதடி வழக்கும், ஜெய் மீது ஒரு கொலை வழக்கு, அருண் மீது 2 கொலை வழக்கு உள்ளது. மூவரும் ரவுடி பட்டியலில் உள்ளனர்.மாமூல் கேட்டு கடத்திய சம்பவத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசாரை பாராட்டுகிறேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X