பொது மக்கள் குறைகேட்பு கூட்டம்| Dinamalar

தமிழ்நாடு

பொது மக்கள் குறைகேட்பு கூட்டம்

Added : அக் 12, 2021
Share
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 257 மனுக்கள் வரப்பெற்றன.கடலுார் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் 257 மனுக்கள் வரப்பெற்றன. இம்மனுக்களை ஆராய்ந்து, கள ஆய்வு செய்து துரிதமாக நடவடிக்கை எடுக்க கலெக்டர்
 பொது மக்கள் குறைகேட்பு கூட்டம்

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 257 மனுக்கள் வரப்பெற்றன.கடலுார் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் 257 மனுக்கள் வரப்பெற்றன. இம்மனுக்களை ஆராய்ந்து, கள ஆய்வு செய்து துரிதமாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.நெய்வேலியை சேர்ந்த ஸ்ரீஜாசேஷாத்ரி, 2019ம் ஆண்டு செஸ் போட்டியில் பெற்ற கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X