பொது செய்தி

இந்தியா

சமுதாயக் கல்லுாரியில் சேர 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம், வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி முதல்வர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாயக் கல்லுாரியில் 2021--22ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியாக

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம், வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி முதல்வர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாயக் கல்லுாரியில் 2021--22ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியாக நடைபெற்று வருகின்றது.சேர்க்கைக்கான அவகாசம், மாணவர்களின் நலன் கருதி இம்மாதம் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், http://pucc.edu.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டு, நாடகம் மற்றும் அரங்கக்கலை, கர்நாடக இசை (பாட்டு), பரதநாட்டியம் போன்ற பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் புதிதாக துவங்கப் பட்டுள்ளனஇளங்கலை பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.முதுநிலைப் பட்டயப் படிப்புகளில் சேர்வதற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு சமுதாயக் கல்லுாரியில் செயல்படும் மாணவர் சேர்க்கை உதவி மையங்களை நேரடியாகவோ, அல்லது http://pucc.edu.in என்ற இணையவழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X