அரசு ஊழியர் தற்கொலை

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருக்கனுார் : பல மாதங்களாக சம்பளம் வழங்காததால், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருக்கனுார் அடுத்த மணவெளி புதுநகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 56; அரசு சார்பு நிறுவனமான கான்பெட் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார்.கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், குடும்பம் வறுமைக்கு சென்றது.இதனால் மனமுடைந்த

திருக்கனுார் : பல மாதங்களாக சம்பளம் வழங்காததால், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த மணவெளி புதுநகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 56; அரசு சார்பு நிறுவனமான கான்பெட் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார்.கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், குடும்பம் வறுமைக்கு சென்றது.இதனால் மனமுடைந்த சவுந்திரராஜன், கடந்த 7ம் தேதி எலி மருந்து பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.இதையறிந்த உறவினர் கள் சவுந்திரராஜனை உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரராஜன் நேற்று இறந்தார். திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X