பொது செய்தி

தமிழ்நாடு

5ம் கட்ட சிறப்பு முகாம் 33,283 பேருக்கு தடுப்பூசி

Added : அக் 12, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாம் அலை துவங்குவதற்கு முன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு கொரோனா ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்துகிறது.கடந்த மாதம் 12ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 மையங்களில் நடந்த முதலாவது சிறப்பு முகாமில், 48 ஆயிரத்து 733 பேருக்கு

கள்ளக்குறிச்சி : தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாம் அலை துவங்குவதற்கு முன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு கொரோனா ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்துகிறது.

கடந்த மாதம் 12ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 மையங்களில் நடந்த முதலாவது சிறப்பு முகாமில், 48 ஆயிரத்து 733 பேருக்கு செலுத்தப்பட்டது. 19ம் தேதி 2ம் கட்ட முகாமில் 16 ஆயிரத்து 602 பேர் செலுத்திக் கொண்டனர். 26ம் தேதி 3ம் கட்ட சிறப்பு முகாமில் 35 ஆயிரத்து 391 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடந்த 3ம் தேதி நடந்த 4ம் கட்ட சிறப்பு முகாமில் 33 ஆயிரத்து 341 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.நேற்று முன்தினம் 10ம் தேதி நடந்த 5ம் கட்ட முகாமில், மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைகள் உட்பட 441 மையங்களில் முகாம் நடந்தது. .
இதில் மொத்தம் 33 ஆயிரத்து 283 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.இதுவரை நடந்த 5 சிறப்பு முகாம்களிலும் மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 868 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதன்படி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 550 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X