பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கல்

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி அருகே நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைத்ததற்கு இழப்பீடு வழங்காததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் 100க்கும் மேற்பட்டஇடங்களில் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை என விவசாயிகள்
 விவசாயி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கல்

செஞ்சி : செஞ்சி அருகே நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைத்ததற்கு இழப்பீடு வழங்காததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் 100க்கும் மேற்பட்டஇடங்களில் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை என விவசாயிகள் போராடிவருகின்றனர்.நேற்றுமுன்தினம் மேல்மலையனுார் அடுத்த கலிங்கமலை கிராமத்தைச் சேர்ந்த மணி, 57; என்ற விவசாயி கூடுதல் நிவாரணம் கேட்டு தனது நிலத்தில் அமைத்துள்ள 200 அடி உயர மின் கோபுரம் மீது ஏறி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அமைச்சர் மஸ்தான் தலைமையில் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று சமாதானக் கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் அமீத், ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ்,முன்னாள் எம்.பி., ஏழுமலை, மின் கோபுர ஒப்பந்த நிறுவன துணை பொது மேலாளர் அசோகன், டி.எஸ்.பி., இளங்கோவன் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், மணியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இதில் மணியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.மணியின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் இழப்பீடும், அரசு சார்பில் நிவாரணம் மற்றும் வேலை வழங்கப்படும் என அமைச்சர் மஸ்தான் உறுதியளித்தார்.அதன்படி நிவாரணமாக 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மின் கோபுர ஒப்பந்த நிறுவனம் மூலம் உடனடியாக வழங்கப்பட்டது.வேலை தொடர எதிர்ப்புவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாதவன் கூறுகையில், 'உரிய நிவாரணம் வழங்காமல் உயர்மின் கோபுர பணிகளை தொடர அனுமதிக்கமாட்டோம். அப்படி நடந்தால் மா.கம்யூ., மற்றும் விவசாய சங்கங்கள் சேர்ந்து போராட்டம் நடத்துவோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202107:10:49 IST Report Abuse
அப்புசாமி இப்பிடி செத்துதான் பாஞ்சி லட்சத்தை வாங்க முடியும் போலிருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X