பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உ.பி., மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட சட்டசபை தேர்தலில் 3,288 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,844 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 3,179 'விவி பேட்' கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரங்கள் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய

விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட சட்டசபை தேர்தலில் 3,288 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,844 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 3,179 'விவி பேட்' கருவிகள் பயன்படுத்தப்பட்டது.

இந்த இயந்திரங்கள் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இதில், 490 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 705 'விவி பேட்' கருவிகளை உத்தரபிரதேச மாநில தேர்தலுக்கு பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, விழுப்புரத்தில் இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கு நேற்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.அப்போது, மின்னணு இயந்திரங்களை டி.ஆர்.ஓ., ராஜசேகரன் பார்வையிட்டார். இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்திற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.தாசில்தார் வெங்கடசுப்ரமணியன், அ.தி.மு.க., நகர துணைச் செயலாளர் செந்தில், தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, பா.ஜ., மாவட்ட பொருளாளர் சுகுமார், தே.மு.தி.க., நகர செயலாளர் மணிகண்டன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X