சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் அதிகாரிக்கு மிரட்டல் அரசு ஊழியர் மீது வழக்கு

Added : அக் 12, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் அரசு பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக அரசு ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பி.டி.ஓ., குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார பொறுப்பு அலுவலராக பணிபுரிபவர் அனிதா செந்தில், 35; சிதம்பரம் ஞானப்பிரகாசக் குளம் கீழ் கரையைச் சேர்ந்தவர் ஞானவேல், 50; இவர்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் அரசு பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக அரசு ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பி.டி.ஓ., குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார பொறுப்பு அலுவலராக பணிபுரிபவர் அனிதா செந்தில், 35; சிதம்பரம் ஞானப்பிரகாசக் குளம் கீழ் கரையைச் சேர்ந்தவர் ஞானவேல், 50; இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தார். மிகை பணியாளர்கள் இடமாறுதலின்படி,காட்டுமன்னார்கோவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இளநிலை அலுவலராக இடமாறுதல் செய்யப்பட்டார்.ஆனால் ஞானவேல் பணிக்கு சரியாக வராமல் இருந்தார். இதனை கண்டித்த அதிகாரிகளிடம் ஞானவேல் தகராறு செய்தார்.

அதனால் சென்னை தலைமை செயலக அலுவலகத்திற்கு ஞானவேல் மீது அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.சென்னை சமூக நலத்துறை தலைமை அலுவலத்தில் இருந்து செப். 8ம் தேதி ஞானவேலுக்கு சென்னைக்கு இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தனர். இதனை ஞானவேல் வாங்க மறுத்து, வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு வேலை செய்யாமல் உட்கார்ந்திருந்தார். இதை கேட்ட அதிகாரிகளை திட்டினார். அவரது வீட்டு சுவரில் இடமாறுதல் உத்தரவை ஒட்டும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட பொறுப்பு அலுவலர் அனிதா செந்தில், சிதம்பரத்தில் உள்ள ஞானவேல் வீட்டிற்கு சென்று இடமாறுதல் உத்தரவை சுவரில் ஒட்டினார்.மறுநாள் 4ம் தேதி ஞானவேல் அலுவலகத்திற்குள் நுழைந்து, ஆபாசமாக திட்டி பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக அதிகாரி அனிதா செந்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கலெக்டர் பாலசுப்ரமணியம் பரிந்துரையில் எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவின் பேரில் அரசு அலுவலர் ஞானவேல் மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X