தமிழ்நாடு

சூர்யா கல்லூரியில் அறிவு சார் காப்புரிமை கருத்தரங்கு

Added : அக் 12, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவு சார் காப்புரிமை கருத்தரங்கு நடந்தது.டில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம், சூர்யா பொறியியல் கல்லுாரி சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து
 சூர்யா கல்லூரியில் அறிவு சார் காப்புரிமை கருத்தரங்கு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான அறிவு சார் காப்புரிமை கருத்தரங்கு நடந்தது.

டில்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம், சூர்யா பொறியியல் கல்லுாரி சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார்.சிறப்பு விருந்தினர் சென்னை, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர் செயலாளர் டாக்டர் சீனிவாசன் பேசுகையில், 'மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் சார்பில் ஆண்டுதோறும் இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கப்படுகிறது.

மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்து திட்ட அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். வரும் 29ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதனை மாணவர்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.தொழில்நுட்ப மன்ற பேராசிரியர் ரமணன், மாநில சிறு குறு தொழில் மைய இயக்குனர் சுரேஷ்பாபுஜி, சென்னை காப்புரிமை அலுவலக தலைமை நிர்வாகி தங்க பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கல்லுாரி முதல்வர்கள் கல்யாண் சக்கரவர்த்தி, பாலாஜி, வெங்கடேஷ், சிகா கல்லுாரி முதல்வர் கோபால் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X