சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கமிஷன் பெற்ற வன அதிகாரியிடம் ரூ.35 லட்சம், கார் பறிமுதல் உளுந்தூர்பேட்டையில் விஜிலன்ஸ் அதிரடி

Added : அக் 12, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வனத்தோட்டக் கழக அலுவலரிடம் கமிஷன் பெற்ற புதுக்கோட்டை வன அதிகாரியிடமிருந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் 35 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்ட வனத்தோட்டக் கழக மண்டல அலுவலர் நேசமணி, 38; இவர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வனத்தோட்டக் கழக


உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வனத்தோட்டக் கழக அலுவலரிடம் கமிஷன் பெற்ற புதுக்கோட்டை வன அதிகாரியிடமிருந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் 35 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட வனத்தோட்டக் கழக மண்டல அலுவலர் நேசமணி, 38; இவர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வனத்தோட்டக் கழக அலுவலகங்களில் கமிஷன் பெற்றுள்ளார். அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டைக்கு வருவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று இரவு 8:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே கண்காணித்தனர்.டி.என்.55 பி.எக்ஸ் 7609 பதிவெண் மகேந்திரா அல்ட்ராஸ் காரில் நேசமணி வந்தார்.

அங்கு தயாராக நின்றிருந்த உளுந்துார்பேட்டை வனத்தோட்டக்கழக வனவர் சங்கர்கணேஷ், 32; அளித்த கமிஷன் பணத்தை வாங்கினார். அப்போது போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.பின், இருவரையும் உளுந்துார்பேட்டை வனத் தோட்டக் கழக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். நேசமணியிடமிருந்து 35 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை பறிமுதல் செய்து நள்ளிரவு 12:00 மணிக்கு மேலும் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் உளுந்துார்பேட்டையில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X