தடுப்பூசி முகாம் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம் கலெக்டர் ஆய்வு

Added : அக் 12, 2021
Share
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய பகுதிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் 5ம் கட்ட சிறப்பு முகாமை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர், அரசூர் பகுதிகளில் நேற்று முன்தினம் 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி
 தடுப்பூசி முகாம் கலெக்டர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய பகுதிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் 5ம் கட்ட சிறப்பு முகாமை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர், அரசூர் பகுதிகளில் நேற்று முன்தினம் 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள அறிவுறுத்தினார்.விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் அகமது அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், இளநிலை உதவியாளர் பாலமுருகன், வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X