பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : அக் 12, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியிலும், தமிழக அளவில் நடந்த மல்யுத்த போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்ட தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் பேச்சு போட்டி நடந்தது. இதில் ஆர்.கே.எஸ்., கல்லுாரி சார்பில் பங்கேற்ற முதுகலை தமிழ் பிரிவு

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியிலும், தமிழக அளவில் நடந்த மல்யுத்த போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்ட தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் பேச்சு போட்டி நடந்தது. இதில் ஆர்.கே.எஸ்., கல்லுாரி சார்பில் பங்கேற்ற முதுகலை தமிழ் பிரிவு மாணவி ஐஸ்வர்யா முதலிடம் பிடித்தார்.இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவர் அரவிந்தன் மூன்றாமிடம் பிடித்தார்.

மேலும், நாமக்கல்லில் தமிழக அளவில் நடந்த மல்யுத்த போட்டியில், கணினி பயன்பாட்டுத்துறை இரண்டாமாண்டு மாணவர் ஏழுமலை தங்கம் வென்றார்.வணிகவியல் மேலாண்மை இரண்டாமாண்டு மாணவர் செந்தில்நாதன் மூன்றாம் பரிசும் பெற்றார். இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லுாரி நிர்வாகம் சார்பில் பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி சேர்மன் மகுடமுடி தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர், துறைத் தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X