பொது செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பு மோதல்: 4 பேர் கைது

Added : அக் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த மேலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர், அப்பகுதியில் சிக்கன் மற்றும் சூப் கடை வைத்துள்ளார். இவரது கடையில், நேற்று முன்தினம் காவணிப்பாக்கத்தைச் சேர்ந்த பாலச்சந்தர், 31; அவரது நண்பர் முகிலன் ஆகியோர் மழைக்காக ஒதுங்கினர்.நீண்ட நேரம் இருவரும் செல்லாததால், தேவேந்திரன் அவர்களை வெளியே போகுமாறு கூறினார். இதனால் அவர்களுக்குள்

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த மேலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர், அப்பகுதியில் சிக்கன் மற்றும் சூப் கடை வைத்துள்ளார்.

இவரது கடையில், நேற்று முன்தினம் காவணிப்பாக்கத்தைச் சேர்ந்த பாலச்சந்தர், 31; அவரது நண்பர் முகிலன் ஆகியோர் மழைக்காக ஒதுங்கினர்.நீண்ட நேரம் இருவரும் செல்லாததால், தேவேந்திரன் அவர்களை வெளியே போகுமாறு கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிந்து, எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் கீழ் மேலமேடு கிராமம், மூர்த்தி, 23; ஜெயச்சந்திரன், 27; ஆகியோரையும், மிரட்டல் விடுத்ததாக காவணிபாக்கம் பாலச்சந்தர், 31; முகிலன், 20; ஆகியோரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X