பொது செய்தி

தமிழ்நாடு

வானுாரில் 82 கிராமங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
வானுார் : வானுார் ஒன்றியத்தில் நேற்று 82 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.கலெக்டர் மோகன் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. 82 கிராமங்களில் நடந்த முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி

வானுார் : வானுார் ஒன்றியத்தில் நேற்று 82 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கலெக்டர் மோகன் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. 82 கிராமங்களில் நடந்த முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்த சிறப்பு முகாம்களை, ஒவ்வொரு கிராமங்கள் தோறும் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிவருத்தரையா, தாசில்தார்கள் சங்கரலிங்கம், சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் ராதாகிருஷணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X