பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையங்கள் முன்னேற்பாடு ஆலோசனை

Added : அக் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகிய ஓட்டுகள் எண்ணும் பணி மாவட்டத்தில் 13 மையங்களில் நடக்கிறது. இந்த மையங்களில் 1,318 கண்காணிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகிய ஓட்டுகள் எண்ணும் பணி மாவட்டத்தில் 13 மையங்களில் நடக்கிறது.

இந்த மையங்களில் 1,318 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஓட்டு எண்ணிக்கை பணிகளில் 5,605 அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.அனைத்து அலுவலர்களுக்கும் கட்டாயம் அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்க வேண்டும். காலை 6:00 மணிக்குள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கு குலுக்கல் முறையில் எண்ணும் அறைகள், மேஜைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.முதலில், ஊராட்சி ஒன்றிய பாதுகாப்பு அறையிலிருந்து தபால் ஓட்டு பெட்டியை எண்ணும் மையத்தில் உள்ள வகை பிரித்தல் அறைக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன் கொண்டு செல்ல வேண்டும்.காவல் துறை பல பரிசோதனைக்கு பின்னரே, வேட்பாளர்கள், முகவர்களை மையத்தில் அனுமதிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் முன்னிலையில் ஓட்டு பெட்டியை திறந்து பாதுகாப்பு அறைக்கு வைத்துள்ள முத்திரையை அகற்றி, முதல் சுற்று ஓட்டு பெட்டியை வகை பிரித்தல் கூட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சுற்றுவாரிய எண்ணப்படும் ஓட்டுகளை அதற்கென உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.ஒவ்வொரு சுற்றிலும் முடிவு அறிவிக்கவும், வேட்பாளர்கள் முகவர்களை அழைக்க மைக் வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X