பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகாத மொத்த ஓட்டுகள் 2.16 லட்சம் மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை

Added : அக் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 81 பேர் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்யவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சித் தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 5,088 என மொத்தம் 6,097 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகாத மொத்த ஓட்டுகள்  2.16 லட்சம்  மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை


விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 81 பேர் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்யவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 293, கிராம ஊராட்சித் தலைவர் 688, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 5,088 என மொத்தம் 6,097 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், 22 கிராம ஊராட்சித் தலைவர், 357 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 5,715 பதவிகளுக்கு 19,982 பேர் நேரடியாக களத்தில் போட்டியிட்டனர்.முதல் கட்ட தேர்தல் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில், 16 மாவட்ட கவுன்சிலர், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 372 கிராம ஊராட்சி தலைவர், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 3,297 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது.

இதையடுத்து, மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் காணை, கோலியனுார், மயிலம், மேல்மலையனுார், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களில் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 135 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 316 கிராம ஊராட்சித் தலைவர், 2,337 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 2,800 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தல்களும் 2,948 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது.முதல் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 303 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 854 பெண் வாக்காளர்களும், 67 மூன்றாம் பாலினத்தவர்கள் என 7 லட்சத்து 55 ஆயிரத்து 224 பேர் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், 3 லட்சத்து 14 ஆயிரத்து 449 ஆண்கள் மற்றும் 3 லட்சத்து 17 ஆயிரத்து 330 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என 6 லட்சத்து 31 ஆயிரத்து 785 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். அதன்படி, 83.66 சதவீதம் ஓட்டுப்பதிவாகியது.இரண்டாம் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 049 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 17 ஆயிரத்து 647 பெண் வாக்காளர்களும், 87 மூன்றாம் பாலினத்தவர்கள் என 6 லட்சத்து 30 ஆயிரத்து 783 பேர் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 ஆண்கள், 2 லட்சத்து 64 ஆயிரத்து 557 பெண்கள் மற்றும் 30 மூன்றாம் பாலினத்தவர்கள் என 5 லட்சத்து 38 ஆயிரத்து 144 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். அதன்படி, 85.31 சதவீதம் ஓட்டுப்பதிவாகியது.மாவட்டத்தில் 13 லட்சத்து 86 ஆயிரத்து 007 வாக்காளர்களில், 11 லட்சத்து 69 ஆயிரத்து 929 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர்.

மீதமுள்ள 2 லட்சத்து 16 ஆயிரத்து 81 பேர் ஓட்டு போடவில்லை. இதனால், மாவட்டத்தில் சராசரி ஓட்டுப்பதிவு 84,41 ஆக உள்ளது. இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று 13 இடங்களில் நடக்கிறது. முகையூர் ஒன்றியத்திற்கு அரகண்டநல்லுார் தனியார் பள்ளி. திருவெண்ணெய்நல்லுாருக்கு காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி. காணைக்கு விழுப்புரத்திற்கு அரசு கலைக்கல்லுாரி.கோலியனுாருக்கு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. கண்டமங்கலத்திற்கு கெங்கராம்பாளையம் தனியார் பொறியியல் கல்லுாரி. விக்கிரவாண்டிக்கு முண்டியம்பாக்கம் தனியார் பள்ளி.ஒலக்கூருக்கு திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி. மயிலத்திற்கு கொல்லியங்குணம் தனியார் கல்லுாரி. மரக்காணத்திற்கு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.வானுாருக்கு ஆகாசம்பட்டு தனியார் கலைக்கல்லுாரி. செஞ்சிக்கு மேல்களவாய் தனியார் கல்லுாரி. வல்லம் ஒன்றியத்திற்கு களையூர் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி. மேல்மலையனுாருக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இதற்காக 13 மையங்களிலும் மொத்தம் 1,318 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 5,605 ஓட்டு எண்ணும் அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கையின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X