பொது செய்தி

இந்தியா

பயணியர் ரயில் சேவையில் 113 சதவீத அதிக வருமானம்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி-நாட்டில், 2020 - 2021 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பயணியர் ரயில் சேவை வாயிலாக 10 ஆயிரத்து 513 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.இது முதல் காலாண்டை விட, 113 சதவீதம் அதிகமாகும்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. எனினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததும், ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன. தற்போது, 96 சதவீத

புதுடில்லி-நாட்டில், 2020 - 2021 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பயணியர் ரயில் சேவை வாயிலாக 10 ஆயிரத்து 513 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.



latest tamil news


இது முதல் காலாண்டை விட, 113 சதவீதம் அதிகமாகும்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. எனினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததும், ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன. தற்போது, 96 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பயணியர் ரயில் சேவையால் ஈட்டப்படும் வருமானம் குறித்த தகவல்களை, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கோரி இருந்தார்.


latest tamil news


அதற்கு பதிலளித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:நாட்டில், 2020 - 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணியர் ரயில் சேவை வாயிலாக, 4,921 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. இதே பயணியர் ரயில் சேவை வாயிலாக இரண்டாம் காலாண்டில், 10 ஆயிரத்து, 513 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது, முதல் காலாண்டை விட, 113 சதவீதம் அதிகமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-அக்-202114:13:38 IST Report Abuse
Ramesh Sargam ஆகையால்தான் ரயில்வே ஊழியர்களுக்கு தீவாளி போனஸாக 78 நாட்கள் சம்பலத்தை போனஸாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. அதேபோல் பயணிகளுக்காக தீவாளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் பயணிகளுக்கு இலவசமாக காபி, டீ, ஸ்வீட் போன்றவற்றை இலவசமாக கொடுத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். ரயில்வே துறைக்கு வருமானம் பயணிகளால்தான் என்பதை அவர்கள் நினைவு கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
12-அக்-202113:54:13 IST Report Abuse
vpurushothaman எல்லாச் சலுகைகளையும் எடுத்திட்டா ஏன் வருமானம் உயராது ? மூத்த குடிமக்களுக்கு அளித்த சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Rajesh Chandran - Bangalore,இந்தியா
12-அக்-202112:42:16 IST Report Abuse
Rajesh Chandran இதில் என்ன பெருமை?? டிக்கெட் கட்டணம் எல்லாம் அதிகரித்துவிட்த்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X