பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் 10ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப் போவதாக, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை அளித்த பேட்டி:முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, தினசரி கொரோனா தொற்று, 36 ஆயிரமாக இருந்தது. அந்த அசாதாரண சூழலில் இருந்து, 1,500 என்ற அளவில்

சென்னை : அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் 10ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப் போவதாக, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.



latest tamil news



அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை அளித்த பேட்டி:முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, தினசரி கொரோனா தொற்று, 36 ஆயிரமாக இருந்தது. அந்த அசாதாரண சூழலில் இருந்து, 1,500 என்ற அளவில் தினசரி பாதிப்பை குறைத்துள்ளோம். கொரோனா தடுப்பு பணி, தடுப்பூசி பணி என அனைத்திலும் அர்ப்பணிப்போடு, மருத்துவ துறை பணியாற்றுகிறது.

அதனால் தான், சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக, தமிழகம் உள்ளது.ஆனாலும், டாக்டர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இதற்காக 2019ல் நடந்த போராட்டத்திற்கு, ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததுடன், தம் ஆட்சி அமைந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.அரசு டாக்டர்களின் ஊதியத்தை உயர்த்த, ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக தேவை.


latest tamil news


அதிலும், பெரும் பகுதி காப்பீட்டின் வாயிலாக, அரசுக்கு வருவாயாக கிடைக்கும். கொரோனாவால் உயிரிழந்த அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனால், வேறு வழியின்றி போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

முதலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக, வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் மதுரையில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்.அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அடுத்த மாதம் 10ம் தேதி, சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diraviam s - CHENNAI,இந்தியா
12-அக்-202116:11:37 IST Report Abuse
Diraviam s அரசு மருத்துவமனைகளில் குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கலாம். இது வருமானத்தை பெருக்கும். அனைவருக்கும் இலவச சிகிச்சை எதற்கு ?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
12-அக்-202116:01:13 IST Report Abuse
r.sundaram ஸ்டாலின் அவர்களின் உண்மை முகத்த்தை கண்டுகொண்டார்கள் போலிருக்கிறது. சொல்வது ஓன்று செய்வது ஓன்று என்பதே அவரது, திமுகாவின் இயல்பு.
Rate this:
Cancel
12-அக்-202115:27:01 IST Report Abuse
ஆரூர் ரங் பிளஸ் டூ வில் ரேங்க் வாங்கியவர்கள் அளிக்கும் பேட்டிகளில் நான் மருத்துவ🤔 நிபுணராக ஆகி ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை செய்வேன் என்பார்😉😉கள். அவர்களுக்கு அரசு வேலை கிடைத்தவுடன் இது போல ஸ்டிரைக் செய்து இலட்சக்கணக்கில் சம்பளம் கேட்பாங்க . இது வேற வாய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X