பொது செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் ஓட்டு எண்ணும் மையத்தில் 110 கேமரா

Added : அக் 12, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் ஓட்டு எண்ணும் மையத்தில் 110 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தியாகதுருகம் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு 24 மணி நேரமும்
 தியாகதுருகம் ஓட்டு எண்ணும் மையத்தில் 110 கேமரா

தியாகதுருகம் : தியாகதுருகம் ஓட்டு எண்ணும் மையத்தில் 110 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தியாகதுருகம் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.ஓட்டு எண்ணிக்கையின் போது பாதுகாப்புக்காக 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் வருபவர்கள் முறையான அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மையத்தில் மொத்தம் 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஓட்டு எண்ணும் 55 டேபிளுக்கு தனித்தனி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளும் 6 சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து வெளியாட்கள் உள்ளே நுழைந்து விடாதபடி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல் ஓட்டு எண்ணி முடிக்கப்பட்ட ஊராட்சிகளுக்கான முகவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப் படுவார்கள்.ஓட்டு எண்ணும் தருணத்தில் உள்ளேயும் வெளியேயும் எவ்வித அசம்பாவிதமும் நடந்து விடாத வகையில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X