முகவருக்கான அனுமதிச் சீட்டு பி.டி.ஓ., அலுவலகத்தில் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகவருக்கான அனுமதிச் சீட்டு பி.டி.ஓ., அலுவலகத்தில் கூட்டம்

Added : அக் 12, 2021
Share
தியாகதுருகம் : ஓட்டு எண்ணும் மையத்திற்கு முகவர் அனுமதிச் சீட்டு வாங்க தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நுாற்றுக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.தியாகதுருகம் ஒன்றியத்தில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.தேர்தல் நடந்த மூன்றாவது நாளே ஓட்டு எண்ணிக்கை

தியாகதுருகம் : ஓட்டு எண்ணும் மையத்திற்கு முகவர் அனுமதிச் சீட்டு வாங்க தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நுாற்றுக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தியாகதுருகம் ஒன்றியத்தில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.தேர்தல் நடந்த மூன்றாவது நாளே ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் அதற்கான ஓட்டு எண்ணும் முகவர் அனுமதிச் சீட்டு வாங்க போதிய காலஅவகாசம் கிடைக்கவில்லை.கடந்த 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று ஒருநாள் மட்டுமே அவகாசம் இருந்தது.

இதனால் ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கானோர் பி.டி.ஓ., அலுவலகத்தில் முகவருக்கான அனுமதிச் சீட்டு வாங்க குவிந்தனர்.ஒரே நேரத்தில் அதிகமான கூட்டம் கூடியதால் அலுவலர்கள் அவர்களுக்கான அனுமதிச் சீட்டை உடனுக்குடன் வழங்க முடியாமல் திணறினர்.இதனால் நேற்று தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X