பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : அக் 12, 2021
Share
Advertisement
பெண் துாக்கிட்டு தற்கொலைகோடம்பாக்கம்: கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அகிலாண்டம், 50. இவர், காசநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். மன உளைச்சலில் இருந்த அகிலாண்டம், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கோடம்பாக்கம் போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.தலைகீழாக கவிழ்ந்த

பெண் துாக்கிட்டு தற்கொலைகோடம்பாக்கம்: கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அகிலாண்டம், 50. இவர், காசநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்.

மன உளைச்சலில் இருந்த அகிலாண்டம், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கோடம்பாக்கம் போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.தலைகீழாக கவிழ்ந்த கார்வளசரவாக்கம்: கோடம்பாக்கம், பூபதி நகரைச் சேர்ந்த சுல்தான், 20, என்பவர், ராயப்பேட்டையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்துகிறார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தன் நண்பர்களுடன், காரில் அதிவேகமாக உலா சென்றார்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அனைவரும் தப்பினர். வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.காவலாளி தற்கொலை முயற்சிஐஸ் ஹவுஸ்: ராயப்பேட்டை, முத்தையா, 2வது தெருவைச் சேர்ந்தவர் குப்பன், 48; காவலாளி. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த குப்பன், பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது மனைவி அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.போன் பறித்த கும்பல் சிக்கியதுகீழ்ப்பாக்கம்: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த, ரெய்னி ரெக்ஸ், 22, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, நாபிங் நைட்மே, 26, ஆகிய இருவரும், நியூ ஆவடி சாலையில் உள்ள, தனியார் உணவகத்தில் வேலை செய்கின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து, சேத்துப்பட்டில் உள்ள தங்கும் விடுதிக்கு, நியூ ஆவடி சாலையில் இருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்றனர்.

அவர்களை நான்கு பேர் கும்பல் வழி மறித்து தாக்கி, மொபைல் போனை பறித்து தப்பினர். கீழ்ப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த, அபிசேக், 19, அப்பாஸ், 20, பார்த்தசாரதி, 21, ராக்கேஷ், 20 ஆகியோரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுதிருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் இரவு, திப்புசாகிப் தெருவில் உள்ள விடுதியில் திடீரென சோதனை நடத்தினர். இதில், 11 பேர் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக, புதுப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், 29, முகமது யூசப், 51, உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். 46 ஆயிரம் ரூபாயும், சீட்டு கட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.ஆபாச வீடியோ எடுத்தவர் கைதுமாங்காடு: விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் மணி அருள், 26. இவர், மாங்காடு அடுத்த கோவூரில் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். அந்த பெண் அளித்த, புகாரின்படி, மாங்காடு போலீசார் விசாரித்து, மணி அருளை நேற்று கைது செய்தனர்.தலைமறைவு ரவுடி சுற்றிவளைப்புபுளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரம், கஸ்துாரி பாய் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. இவர் மீது புளியந்தோப்பு காவல் நிலையம் உட்பட, பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாக இருந்த கார்த்திக், புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதியில் இருப்பதாக, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அவரை சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X