சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாங்க பணம் தராததால் பெயின்டரை குத்திய ரவுடிகள் கைது

Added : அக் 12, 2021
Share
Advertisement
வியாசர்பாடி : வியாசர்பாடியில், பெயின்டரை பீர் பாட்டிலால் குத்திய இரு ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர்.சென்னை வியாசர்பாடி, கரிமேடு முதல் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன், 31; பெயின்டர்.நேற்று வேலை முடிந்து வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மெயின் ரோட்டில் உள்ள மதுக் கடையில் மதுபானம் குடித்து விட்டு வெளியே வந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று ரவுடிகள், பார்த்திபனிடம்

வியாசர்பாடி : வியாசர்பாடியில், பெயின்டரை பீர் பாட்டிலால் குத்திய இரு ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர்.சென்னை வியாசர்பாடி, கரிமேடு முதல் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன், 31; பெயின்டர்.நேற்று வேலை முடிந்து வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மெயின் ரோட்டில் உள்ள மதுக் கடையில் மதுபானம் குடித்து விட்டு வெளியே வந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று ரவுடிகள், பார்த்திபனிடம் மது வாங்க பணம் கேட்டு தகராறு செய்தனர்.பணம் இல்லை என்றதும், பீர் பாட்டிலை உடைத்து அடித்ததில் பார்த்திபனின் தலை, மூக்கு, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்த மகேஷ்குமார், 21; சாஸ்திரி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 22, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான வின்சென்ட் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X