போக்குவரத்து நெரிசல் ஸ்தம்பித்தது கள்ளக்குறிச்சி

Added : அக் 12, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பஸ் நிலையம் அருகே தனியார் பள்ளி பஸ் பழுதாகி நின்றதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே தியாகதுருகம் சாலையில் நேற்று காலை 11:00 மணியளவில் தனியார் பள்ளி பஸ் திடீரென பழுதாகி நின்றது.நகரின் நான்கு முக்கிய சாலைகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ், லாரி, கார் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள்
 போக்குவரத்து நெரிசல் ஸ்தம்பித்தது கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பஸ் நிலையம் அருகே தனியார் பள்ளி பஸ் பழுதாகி நின்றதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே தியாகதுருகம் சாலையில் நேற்று காலை 11:00 மணியளவில் தனியார் பள்ளி பஸ் திடீரென பழுதாகி நின்றது.

நகரின் நான்கு முக்கிய சாலைகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ், லாரி, கார் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பஸ்சை சிறிது துாரத்திற்கு தள்ளிச்சென்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X