சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டத்தில் வார்டு உறுப்பினர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருத்தணி : ஜாதி சான்று வழங்க கோரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர், திடீரென பிளேடால் கழுத்தறுத்து, தற்கொலைக்கு முயன்றார்.திருவள்ளூர் மாவட்டம்,பழங்குடி கொண்டாரெட்டீஸ் மலைஜாதி முன்னேற்ற சங்கம் சார்பில், தலைவர் விஜயன் தலைமையில், ஜாதி சான்றிதழ் வழங்க கோரி, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகசாலையில், நேற்று

திருத்தணி : ஜாதி சான்று வழங்க கோரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர், திடீரென பிளேடால் கழுத்தறுத்து, தற்கொலைக்கு முயன்றார்.

திருவள்ளூர் மாவட்டம்,பழங்குடி கொண்டாரெட்டீஸ் மலைஜாதி முன்னேற்ற சங்கம் சார்பில், தலைவர் விஜயன் தலைமையில், ஜாதி சான்றிதழ் வழங்க கோரி, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகசாலையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகாவில் இருந்து, 250க்கும் மேற்பட்டோர், தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கீளப்பூடி ஊராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினர் பெரியசாமி, 70, என்பவரும் பங்கேற்றார்.அங்கு வந்த திருத்தணி கோட்டாட்சியர் சத்யா, போராட்டக்காரர்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு, கலெக்டர் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி, சமரசம் செய்தார்.அப்போது, வார்டு உறுப்பினர் பெரியசாமி, தன் பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால், கழுத்து பகுதியில் அறுத்துக் கொண்டார்.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.திருத்தணி. ஏ.எஸ்.பி., சாய்பரணீத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X