பொது செய்தி

தமிழ்நாடு

விதை வாங்க திரண்ட விவசாயிகள்: வேளாண் அலுவலகத்தில் பரபரப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வேளாண் துறை அலுவலகத்தில் விதை உளுந்து வாங்க விவசாயிகள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் விதை உளுந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 டன் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.ஆனால், விவசாயிகளுக்கு எந்த காலம் வரை வழங்கப்படும்,
 விதை வாங்க திரண்ட விவசாயிகள்: வேளாண் அலுவலகத்தில் பரபரப்பு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வேளாண் துறை அலுவலகத்தில் விதை உளுந்து வாங்க விவசாயிகள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

உளுந்துார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் விதை உளுந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 டன் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.ஆனால், விவசாயிகளுக்கு எந்த காலம் வரை வழங்கப்படும், என்ற விபரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.இதனால் நேற்று காலை 8:00 மணி முதலே விவசாயிகள் உளுந்துார்பேட்டையில் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் நுாற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.

தகவலறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளை வரிசையில் நின்று ஒழுங்குபடுத்த முயற்சித்தனர்.ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பிற்பகல் 3:00 மணியளவில் கூட்டம் குறையத் துவங்கியது.விதை உளுந்து தங்களுக்கு கிடைக்குமோ, கிடைக்காேதா என்ற சந்தேகத்தில் விவசாயிகள் திரண்டதால்

இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம். இனி வரும் காலங்களில், எத்தனை நாட்களுக்கு விதை உளுந்து வழங்கப்படும் என்ற தகவலை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவித்தால் சிரமம் இன்றி வாங்கிச் செல்லமுடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X