பொது செய்தி

தமிழ்நாடு

மோசடி நிறுவனத்தில் முதலீடு பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை : 'மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், பணத்தை திரும்ப பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை அணுகலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, தி.நகரில், 'சூர்யா எஸ்டேட் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீட்டார்கள் செலுத்தியபல கோடி ரூபாயை, முதிர்வு காலம் முடிந்தும் திரும்ப தராமல் மோசடி செய்துவிட்டது.

சென்னை : 'மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், பணத்தை திரும்ப பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை அணுகலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகரில், 'சூர்யா எஸ்டேட் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீட்டார்கள் செலுத்தியபல கோடி ரூபாயை, முதிர்வு காலம் முடிந்தும் திரும்ப தராமல் மோசடி செய்துவிட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், இது குறித்து புகார் அளித்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சூர்யா எஸ்டேட் பைனான்ஸ் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப ஒப்படைத்து வருகிறது. முதலீட்டு தொகையை திரும்ப பெறாதவர்கள், முதலீட்டு அசல் பத்திரம், அடையாள அட்டை, விலாச சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன், சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரடியாக வரலாம்.மேலும், விபரங்களுக்கு, 044 - 2250 4332 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். பணம் திரும்ப பெற்றுத் தரப்படும் என, போலீசார் நேற்று அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X