பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் ; பெரும்பாலான இடங்களில் தி.மு.க., முன்னிலை

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை : ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, 74 மையங்களில், இன்று பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இரண்டு கட்டங்களாக, 6 மற்றும் 9ம் தேதிகளில், ஊரக
உள்ளாட்சி தேர்தல் ; பெரும்பாலான இடங்களில் தி.மு.க., முன்னிலை

சென்னை : ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, 74 மையங்களில், இன்று பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இரண்டு கட்டங்களாக, 6 மற்றும் 9ம் தேதிகளில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம், 140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,901 ஊராட்சி தலைவர், 22 ஆயிரத்து 581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பல பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலில், 41 ஆயிரத்து 500 ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் 74 ஓட்டு எண்ணும் மையங்களில், அவை வைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 8:௦௦ மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஓட்டு எண்ணிக்கை மையங்களின் உள்ளே மற்றும் வெளியே, 'சிசிடிவி கேமரா' வாயிலாக கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.


latest tamil news


ஓட்டுச் சீட்டுக்கள் வாயிலாக தேர்தல் நடந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் தெரிய அதிக நேரம் தேவைப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.


தி.மு.க., முன்னிலை


ஓட்டு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் திமுக., கூட்டணியே தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 26 இடங்களிலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 56 இடங்களிலும் திமுக முன்னிலை வகிக்கின்றன. அதிமுக தரப்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 3 இடங்களிலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
12-அக்-202116:35:37 IST Report Abuse
INDIAN Kumar ஆளும் கட்சி ஜெய்க்கலேன்னா தான் அதிசயம் எல்லா மாநிலங்களிலும் .
Rate this:
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
12-அக்-202115:49:57 IST Report Abuse
Santhosh Gopal திமுகல இருக்குற ஒவ்வொறு கட்சிக்கும் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சிகள் ஆனால் அதிமுகவில் பாஜகவுக்கு நெகட்டிவ் வோட் பேங்க்..... அதிமுக தனித்து நின்ற கணக்கு தான். திமுக தனித்து நின்று இந்த வெற்றி பெற்றிறுந்தால் பாராட்டலாம். உன்மையில் அதிமுக தனித்து ஒரு சீட்டு ஜெயித்தாலும் அது திமுகவுக்கு சாவு மணி தான். இதை ஏன் எந்த ஊடகமும் விவாதிக்க மறுக்கிறது?
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
12-அக்-202115:47:20 IST Report Abuse
பாமரன் நம்ம ஆட்டுக்குட்டி பாஞ்சு பாஞ்சு பிரச்சினை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X