சென்னை: தமிழகம், கேரளா, பெங்களூருவில் 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் தொடர்புடைய 23 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரள சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் காளிதாஸ் சகோதரர் சிங்காரத்தின் வீடு சிவகங்கை அண்ணா நகரில் உள்ளது. அங்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடந்தது.

கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள மருத்துவர் தினேஷ் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியிலுள்ள டேனிஷ் என்பவரது வீட்டிலும், பொள்ளாச்சி அருகே அங்கலங்குறிச்சியில் உள்ள சந்தோஷ் என்பரின் வீடும் சோதனையில் சிக்கியது.

தேனி, பெரியகுளம் எண்டபுளி அண்ணாநகரில் வசிக்கும் வேல்முருகன் வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.