எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்: பிரேசில் அதிபர்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பிரேசிலியா: கால்பந்து போட்டியை காண அனுமதி மறுத்ததால், ‛‛எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது,'' என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்தார்.கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தற்காப்பு
கால்பந்து போட்டி, பிரேசில்அதிபர், கோவிட், அதிகாரிகள், அனுமதிமறுப்பு,

பிரேசிலியா: கால்பந்து போட்டியை காண அனுமதி மறுத்ததால், ‛‛எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது,'' என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே போல், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார்.


latest tamil news


இந்நிலையில், பிரேசிலின் சா பாலோ நகரில் குடும்பத்தோடு விடுமுறையைக் கொண்டாடி வரும் அதிபர் ஜெய்ர் போல்சனரோ உள்நாட்டு அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பார்பதற்காக அங்குள்ள மைதானுக்குச் சென்றார். ஆனால், மைதானத்தில் இருந்த அதிகாரிகள் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவரை மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிரேசில் அதிபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எதற்கு தடுப்பூசி சான்றிதழ்?. நான் கால்பந்து விளையாட்டை பார்க்க விரும்பினேன். அதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அது ஏன்? தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202115:18:15 IST Report Abuse
அப்புசாமி பரவாயில்லியே... அங்கே சட்டத்தை மதித்து அதிபரையே வெளியேத்திட்டாங்க. இங்கெயா இருந்தா தலிவரை மட்டும் உக்ளெ அனுமதித்து,மக்களை மொத்தமா வெளியேத்தியிருப்பாங்க.ஏ.ப ஆட்சியல்லவோ இது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-அக்-202113:12:35 IST Report Abuse
Ramesh Sargam அதிபருக்கே அனுமதி மறுப்பு. ஆனாலும் ஒரு நாட்டின் அதிபர் தன்னாட்டு மக்களு ஒரு உதாரணமாக திகழவேண்டும். அவரே இப்படி பிடிவாதம் செய்தால்...?
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
12-அக்-202113:08:40 IST Report Abuse
Balaji அதிபருக்கே தெரியாமல் அந்த நாட்டில் எப்படி அப்படி ஒரு கட்டுப்பாடு வந்தது? இவரைப்போல ஒருசிலராவது தடுப்பொசிக்கு எதிராக நிற்கவேண்டும்... தடுப்பூசியால் இந்த வைரஸ் கட்டுக்குள் வந்தது என்பது ஒரு கட்டுக்கதை...
Rate this:
Venkata Krishnan - Toronto ,கனடா
13-அக்-202105:46:55 IST Report Abuse
Venkata Krishnanஆஹா,இந்தாண்டின் விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கு உங்களுக்கு மட்டுமே நோபல் பரிசு தரப்பட வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X