பொது செய்தி

தமிழ்நாடு

19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,இன்று (அக்.,12ம் தேதி): நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, தர்மபுரி,
tamilnadu, raninfall, 19 district, heavyrain, Chennai Weather center, announce, தமிழகம், 19 மாவட்டங்கள், கனமழை, சென்னை, வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


latest tamil news



வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,


இன்று (அக்.,12ம் தேதி): நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 13ம் தேதி: நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.,14ம் தேதி: நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


அக்.,15ம் தேதி: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலுார், திருச்சி, கரூர், அரியலுார், பெரம்பலுார், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்.,16ம் தேதி: தேனி, நீலகிரி, கோயம்புத்துார், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


சின்னக்கல்லார் (கோவை) 13 செ.மீ., வால்பாறை (கோவை) 11 செ.மீ., அரியலுார் 10 செ.மீ., தேவாலா (நீலகிரி), லப்பைக்குடிகாடு (பெரம்பலுார்), தஞ்சாவூர், சோலையர் (கோவை), மஞ்சளாறு (தஞ்சாவூர்) தலா 9 செ.மீ., பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தொழுதுார் (கடலுார்), மன்னார்குடி, நன்னிலம், வலங்கைமான் (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை) தலா 8 செ.மீ., திருமானுார் (அரியலுார்), பெரும்ங்களூர் (புதுக்கோட்டை) கெட்டி (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கும்பகோணம், வல்லம் (தஞ்சாவூர்), சிவலோகம் (கன்னியாகுமரி), விழுப்புரம் தலா 7 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

குறிப்பு: அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதைஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.


latest tamil news



மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:


இன்று 12ம் தேதி: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை 13ம் தேதி: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்.,14ம் தேதி: தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்.,15 மற்றும் 16ம் தேதி: தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்:


இன்று 12ம் தேதி: கேரள மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை 13ம் தேதி: தென்கிழக்கு அரபிக்கடல், கேரள மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்.,14ம் தேதி: கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்.,15 மற்றும் 16ம் தேதி: தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X