2 வயது குழந்தைகளுக்கும் கோவாக்சின் தடுப்பூசி; மத்திய அரசு அனுமதி?

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (7)
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் 2 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 95.89 கோடி டோஸ் தடுப்பூசிகள்
Paediatric Covaxin, Approved, Children, Aged, Two Years, Above 2 Years, Bharat Biotech, குழந்தைகள், கோவாக்சின், தடுப்பூசி, அனுமதி, மத்திய அரசு

புதுடில்லி: நாடு முழுவதும் 2 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 95.89 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
சில நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை அளவில் இருந்து வந்தன. இதற்காக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி வல்லுநர்கள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தன.


latest tamil newsஇதனையடுத்து, கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த வல்லுநர் குழு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையமும் 2 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 நாட்கள் இடைவெளியில் இரு டோஸ்கள் கொண்ட குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வெளியிடவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
12-அக்-202118:42:43 IST Report Abuse
SUDHAKAR ஆராய்ச்சி முடிவுகளை முதலில் வெளியிட வேண்டும். பிறகு பேறொருடைய அனுமதியின் பெயரில் தடுப்பூசி செலுத்தலாம். இதை பள்ளிகளிடம் ஓப்படைக்கலாம்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-அக்-202117:11:37 IST Report Abuse
S.Baliah Seer குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஏகப்பட்ட தடுப்பூசிகளை போட்டு வருகிறார்கள். இவற்றில் புளு, டைபாயிட், அம்மை, மற்றும் பிற வைரஸ் எதிர்ப்பு டோஸ்களும் அடங்கும். தயவு செய்து நாட்டை நாசம் செய்யாதீர்கள். மக்கள் படும் துன்பங்கள் போதும்.
Rate this:
12-அக்-202118:46:29 IST Report Abuse
ஆரூர் ரங்அப்போ இயற்கைக்கு எதிரான நவீன கருவிகள் எதனையும் வாங்காதீர்கள். ( கணினி செல்போன் உட்பட🤔 )...
Rate this:
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
12-அக்-202119:00:28 IST Report Abuse
Chandradas Appavooஉனது தலையில் என்னதான் இரிக்கிட்டது எண்டு தெரியவில்லை....
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
12-அக்-202115:08:25 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X