உள்ளாட்சி தேர்தல் : அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு

Updated : அக் 13, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (62) | |
Advertisement
சென்னை: 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பின்னடைவை சந்தித்துள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் மாநிலத்தை ஆளும் தி.மு.க.,வே முன்னிலை வகித்து வருகிறது.9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில், இரவு 10.15 மணி நிலவரப்படி, தி.மு.க., முன்னிலை
Local Body Election, Election Result, ADMK, உள்ளாட்சி தேர்தல், அதிமுக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை: 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பின்னடைவை சந்தித்துள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் மாநிலத்தை ஆளும் தி.மு.க.,வே முன்னிலை வகித்து வருகிறது.

9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில், இரவு 10.15 மணி நிலவரப்படி, தி.மு.க., முன்னிலை வகிக்கிறது.

1391 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், 725 இடங்களில் முன்னிலை நிலவரம் தெரிந்துள்ளது.
அதில்,
தி.மு.க., - 572
அ.தி.மு.க., - 85

மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் - 68 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 125க்கு முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது.அதன்படி, திமுக 121 லும், அதிமுக 4-லும் முன்னிலை வகிக்கிறது.

9 மாவட்டங்களில் 3,007 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இதுவரை 240 பேரும்,23,211 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,573 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.மாவட்ட நிலவரம்

மாவட்ட கவுன்சிலர் பதவிகள் முன்னிலை நிலவரம்latest tamil news
ஒன்றிய கவுன்சிலர் பதவி முன்னிலை நிலவரம்latest tamil news


தி.மு.க., வேட்பாளர் வெற்றி


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம், திவான்சாபுதுார் ஊராட்சியில், 8,556 வாக்காளர்கள் உள்ளனர். தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., ஆதரவில் வேட்பாளர் கலைவாணி, அ.தி.மு.க., ஆதரவில் வேட்பாளர் சரோஜினி போட்டியிடுகின்றனர். கடந்த, 9ம் தேதி நடந்த வாக்குப்பதிவில், 76.47 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.

இன்று (12ம் தேதி), 3 மேஜைகள் அமைக்கப்பட்டு, நான்கு சுற்றுக்களாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜினி, 2,075 வாக்குகள் பெற்றார். தி.மு.க., வேட்பாளர் கலைவாணி, 4,372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 105 செல்லாத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. 25 ஆண்டுக்குப்பின் திவான்சாபுதூரில் தி.மு.க.,வினர், அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி


latest tamil newsகோத்தகிரி நடுஹட்டி ஊராட்சி உள்ளாட்சி இடைத்தேர்தலில், 22 வயதான பட்டதாரி பெண் நதியா, 112 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திலகவதியை, 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க., ஆதரவுடன் வெற்றி பெற்ற நதியாவுக்கு, ஊராட்சி தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், காங்., நிர்வாகி சில்லபாபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
13-அக்-202116:05:51 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam இந்த வெற்றி மக்களில் புத்திசாலித்தனமான முடிவு அவ்வளவே. ஆனால் தான் ஆட்சியில் இருந்த போது நடத்த திராணி இல்லாத எதிர் கட்ச்சிகள் இப்போது புலம்புவது நாடகமே.... இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்குத்தான் புத்திசாலி நடுநிலை வாக்காளர் கூட கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பர் . ஏனென்ரால் எதிர் கட்சியினரை வெற்றிபெறச்செய்தால் தனது தொகுதிக்கு எந்த நல்ல அரசு திட்டங்க்களும் கிடைக்காது ( அது தான் எதிரி திராவிட அரசியல்) அப்படி இருக்க இது போண்ற நகர, பஞ்சாயத்து, ஊராட்சி தேர்தல் களில் மக்களுக்கே தெரியும் யாரெல்லாம் மாற்றீ வாக்களிதிருபர் என்று அப்படி இருக்க் ஒரு சில ஆயிரம் மட்டுமே வாக்குகள் எங்கிற பட்சத்தில் மக்கள் மிக் தெளீவாக ஆளும் கட்ச்சிக்கே வாக்களிப்பர் அதனால் ஆளும் கட்சிவெற்றி என்பது அதுவும் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆளும் கட்சி.
Rate this:
Cancel
A M Sunil - Doha,கத்தார்
13-அக்-202111:21:16 IST Report Abuse
   A M Sunil பிரியாணி அண்டா திருட்டு கும்பலுக்கு எத்தனை சீட் கெடச்சது.
Rate this:
Cancel
A M Sunil - Doha,கத்தார்
13-அக்-202111:15:14 IST Report Abuse
   A M Sunil அதிமுக படுதோல்வி. அது தான் உண்மை. அதென்ன பின்னடைவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X