பொது செய்தி

இந்தியா

நவராத்திரியில் இரு தலை, 3 கண்களுடன் பிறந்த கன்று; துர்காவின் அவதாரம் என மக்கள் வழிபடல்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புவனேஷ்வர்: ஒடிசாவில் நவராத்திரி தினத்தில் பிறந்த கன்று இரு தலைகள், 3 கண்களுடன் பிறந்துள்ளது. நவராத்திரியில் பிறந்ததால் அப்பகுதி மக்கள் கடவுள் துர்காவின் அவதாரமாக வழிபடத் துவங்கியுள்ளனர்.உலகில் ஆங்காங்கே சில சம்பவங்கள் வினோதமாகவும், நம்ப முடியாத வகையிலும் தோன்றலாம். அப்படி ஆச்சரியப்படும் வகையில் நடக்கும் சம்பவங்கள் பேசுப்பொருளாகவும் மாறிவிடும். அந்தவகையில்,
Calf Born, Two Heads, Three Eyes, Navratri Worshipped, Maa Durga, Avatar, Odisha

புவனேஷ்வர்: ஒடிசாவில் நவராத்திரி தினத்தில் பிறந்த கன்று இரு தலைகள், 3 கண்களுடன் பிறந்துள்ளது. நவராத்திரியில் பிறந்ததால் அப்பகுதி மக்கள் கடவுள் துர்காவின் அவதாரமாக வழிபடத் துவங்கியுள்ளனர்.

உலகில் ஆங்காங்கே சில சம்பவங்கள் வினோதமாகவும், நம்ப முடியாத வகையிலும் தோன்றலாம். அப்படி ஆச்சரியப்படும் வகையில் நடக்கும் சம்பவங்கள் பேசுப்பொருளாகவும் மாறிவிடும். அந்தவகையில், ஒடிசாவில் நவராத்திரி தினத்தில் 2 தலை, 3 கண்களுடன் கன்று பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள நப்ரங்க்பூர் மாவட்டம் பிஜப்பூர் கிராமத்தை சேர்ந்த தனிராம் என்ற விவசாயிக்கு சொந்தமான பசு , நவராத்திரி தினத்தில் கன்று ஈன்றுள்ளது. அந்த கன்று இரு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்ததால் தனிராமின் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர்.


latest tamil news


இது தொடர்பாக தனிராம் கூறுகையில், ‛இரு தலைகளுடன் பிறந்ததால் கன்றுக்குட்டி தன் தாயிடம் இருந்து பால் குடிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வெளியில் இருந்து பால் வாங்கி கன்றுக்கு கொடுத்து வருகிறோம்,' என்றார்.

நவராத்திரி தினத்தில் இந்த கன்று அபூர்வமாக பிறந்ததால், அப்பகுதி மக்கள் இதனை கடவுள் துர்கா தேவியின் அவதாரமாக வழிபடத் துவங்கியுள்ளனர்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
12-அக்-202118:21:05 IST Report Abuse
தமிழன் பெரியார் வடநாட்டிலும் பிறக்க வேண்டும்... கல்வி மட்டுமே அடுத்த தலைமுறையை வழிநடத்த வேண்டும்...
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
12-அக்-202117:08:40 IST Report Abuse
amuthan எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது. மூடபழக்கங்களில் ஊறிய மக்கள்
Rate this:
Soumya - Trichy,இந்தியா
12-அக்-202117:46:27 IST Report Abuse
Soumyaசொரியார் வந்தனால கள்ளக்காதல் தா கூடிச்சி மிஸ்டர் கருப்புச்சட்டை...
Rate this:
12-அக்-202118:44:04 IST Report Abuse
ஆரூர் ரங்பெரியாருக்கு யுனெஸ்கோ சாக்ரடீஸ் பட்டம் கொடுத்தது என்பதையே😛 நம்புபவர்கள் பகுத்தறிவு 😇...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-அக்-202116:32:40 IST Report Abuse
S.Baliah Seer மக்கள் மூடர்களாய் இருக்கும் வரை இந்த பூமியில் இதுபோன்ற மூட நம்பிக்கைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். இரண்டு கன்றுகள் ஜீன்ஸ் கோளாறினால் ஒட்டி பிறந்து இதுபோன்ற வினோத உருவத்தை கொண்டிருக்கின்றன. எங்கள் ஊரில் வேப்ப மரத்தில் பால் வடிந்ததை 70-வருடங்களுக்கு முன் மக்கள் மாரியாத்தா, காளியாத்தா என்று குலவை போட்டு வழிப்பட்டதை போல்தான் இதுவும்.
Rate this:
Raman - kottambatti,இந்தியா
13-அக்-202105:04:24 IST Report Abuse
Ramanபிள்ளையார் பால் குடித்த கதையை மறந்துடீங்களே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X