பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட பணிகள் இடத்தில் தண்ணீர் தேங்கி நின்றால் அபராதம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: ‛‛சென்னையில் கட்டட பணிகள் நடக்கும் இடங்களில் தேவையற்ற வகையில் தண்ணீர் தேங்கி நின்றால் அபராதம் விதிக்கப்படும்,'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை கண்ணகி நகரில், ‛கலைஞரின் வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.,12) தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: டெங்கு
கட்டட பணிகள், தண்ணீர் தேக்கம், அபராதம்விதிப்பு, அமைச்சர் சுப்பிரமணியன், எச்சரிக்கை

சென்னை: ‛‛சென்னையில் கட்டட பணிகள் நடக்கும் இடங்களில் தேவையற்ற வகையில் தண்ணீர் தேங்கி நின்றால் அபராதம் விதிக்கப்படும்,'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கண்ணகி நகரில், ‛கலைஞரின் வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.,12) தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்னர்.


latest tamil news


டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகங்கள், மருத்துவத் துறை சார்பில் வீடுகளில் தேவையற்ற இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுவது, கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் அனைத்துத் துறைகளுடனான கூட்டம் நடத்தி, ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் 7,707 இடங்களில் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த இடங்களில்தான் தேவையற்ற இடங்களில் தேங்காய் ஓடுகள், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது அதிகமாக இருக்கும். இவற்றை அகற்றிட சென்னை கட்டடத் தொழிலாளர் சங்கம், வணிகர்கள் நிர்வாகிகளுக்குத் தெரிவிக்க இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் அபராதம் விதிப்பது பற்றியும் தெரிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Karthikeyan - Chennai,இந்தியா
13-அக்-202109:05:27 IST Report Abuse
P Karthikeyan மாமூல் வேணும்னு நேரடியா கேட்டுட்டு போங்க.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-அக்-202106:20:10 IST Report Abuse
Kasimani Baskaran ஊரின் நடுவே கூவம் ஓடவிட்டு கொசுப்பண்ணை வைத்து ஜமாய்க்கும் அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-அக்-202106:08:40 IST Report Abuse
Mani . V ஆமா, சாலைகளில் தேங்கி நிற்க்கும் தண்ணீருக்கு யாருக்கு அபராதம் விதிப்பது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X