அரசியல் செய்தி

தமிழ்நாடு

எனக்காக பலரையும் ரவுடிகளாக மாற்றுவது வேதனையளிக்கிறது: வேலூர் இப்ராஹிம் கோவையில் பேச்சு

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
கோவை: ''தமிழகத்தி்ல் நான் எங்கு சென்றாலும் வி.சி.,தொண்டர்கள் எனக்கு எதிராக போராடி வன்முறையை தூண்டுகின்றனர்.வி.சி., தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை காட்டிக்கொள்ளாமல் பலரையும் ரவுடிகளாக மாற்றி வருவது வேதனையளிக்கிறது,'' என்று பா.ஜ., சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு

கோவை: ''தமிழகத்தி்ல் நான் எங்கு சென்றாலும் வி.சி.,தொண்டர்கள் எனக்கு எதிராக போராடி வன்முறையை தூண்டுகின்றனர்.வி.சி., தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை காட்டிக்கொள்ளாமல் பலரையும் ரவுடிகளாக மாற்றி வருவது வேதனையளிக்கிறது,'' என்று பா.ஜ., சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.



latest tamil news




பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான அனைத்து செலவுகளையும் கோவை மாவட்ட பா.ஜ.,.அரசு தொடர்பு பிரிவு ஏற்றுக்கொண்டது.அக்குழந்தைகளின் முதற்கட்ட தேவைகளுக்கான நிதி உதவி வழங்கும் விழா கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பா.ஜ., சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்று குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கினார்.


latest tamil news




தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி என்று தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வசை பாடுகின்றன.ஆனால், தொடர்ந்து அச்சமுதாய மக்களுக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம். இது மட்டுமல்லாமல், இஸ்லாமிய, கிறிஸ்தவ ஏழை மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கான உதவிகளை செய்து வருகிறோம்.பா.ஜ., அனைவருக்குமான கட்சி. கடந்த மாதம் கோவையில், 50 இஸ்லாமியர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். இன்றும் பலர் இணைகின்றனர்.

மதுபான கடைகள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்கள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால், கோவில்கள் திறக்கப்படுவதில் மட்டும் கட்டுப்பாடுகளை தி.மு.க., என்ற இந்து விரோத அரசு செய்கிறது. எங்களது மாநில தலைவர் பத்து நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் கோவில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தி்ல் நான் எங்கு சென்றாலும் வி.சி.,தொண்டர்கள் எனக்கு எதிராக போராடி வன்முறையை தூண்டுகின்றனர்.வி.சி., தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை காட்டிக்கொள்ளாமல் பலரையும் ரவுடிகளாக மாற்றி வருவது வேதனையளிக்கிறது.இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.,தலைவர் நந்தகுமார்,பொதுச்செயலாளர் ரமேஷ் உட்பட கட்சியினர் பலர் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
13-அக்-202102:48:46 IST Report Abuse
SUBBU திமுகவை மற்ற விஷயத்தில் பிடிக்கா விட்டாலும் இந்த விடுதலை சிறுத்தைகள் விஷயத்தில் மட்டும் ரொம்ப பிடிக்கும்.ஏன் என்றால் சரக்கு மிடுக்கு என்று சொல்லி திமுக நபர்களிடம் அவர்கள் வாலாட்ட முடியாது.சமீபத்தில் மதுரையில் காதல் நாடகம் புரிந்த ரெண்டு சிறுத்தை குட்டிகளை கடவாயில் இரத்தம் வரும் அளவிற்கு அடி பிண்ணி எடுத்து விட்டார்கள். இதற்கெல்லாம் தாய் சிறுத்தையான இந்த திம்மலவாலன் என்ற திருமா மதுரைக்கு வந்து அடிபட்ட சிறுத்தைகளுக்கு ஆறுதல் சொல்ல வரும் என்று "எதிர்பார்க்கப் பட்டது"ஆனால் தாய் சிறுத்தை ஆறுதல் கூற வரவும் இல்லை,தோழமை சுட்டவும் வில்லை.மீறி தோழமையை சுட்டி ஆறுதல் கூற மதுரைக்கு வந்திருந்தாலும் தாய் சிறுத்தையை புரட்டி எடுக்கவும் ஸ்கெட்ச் ரெடியானதால் தாய் சிறுத்தை அப்படியே பம்மி பதுங்கி விட்டது.
Rate this:
Cancel
என்னுயிர் தமிழகமே - Ameerpet Hyderabad,இந்தியா
13-அக்-202102:00:09 IST Report Abuse
என்னுயிர் தமிழகமே முஸ்லிம்கள் இடத்தில் சில படித்த பண்பானவர்கள் இருப்பது கண்கூடு
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
13-அக்-202100:08:50 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மதச்சார்பின்மையின் தமிழக அடையாளம் இந்த இப்ராஹீம்
Rate this:
Chennai B.S - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-202108:57:11 IST Report Abuse
Chennai B.Sஸ்ஸ்ஸ் அப்பா கண்ண கட்டுதே தாங்க முடியலடா இவனுகவேர உசுப்பேத்தி ........
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
13-அக்-202114:28:47 IST Report Abuse
Barakat Ali"கண்ண கட்டுதே"...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X