அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் வெட்டை சமாளிக்க அவசர காலத் திட்டம் ராமதாஸ் கோரிக்கை

Added : அக் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:'நிலக்கரி தட்டுப்பாடு விவகாரத்தால், மின் பற்றாக்குறை ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அவசர காலத் திட்டத்தைத் தயாரித்து, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:வெளிநாடுகளில் உற்பத்தி குறைவு காரணமாக, நிலக்கரி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, நிலக்கரி உற்பத்தி
  மின் வெட்டை சமாளிக்க அவசர காலத் திட்டம் ராமதாஸ் கோரிக்கை

சென்னை:'நிலக்கரி தட்டுப்பாடு விவகாரத்தால், மின் பற்றாக்குறை ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அவசர காலத் திட்டத்தைத் தயாரித்து, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:வெளிநாடுகளில் உற்பத்தி குறைவு காரணமாக, நிலக்கரி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தான் நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம்.

இந்தியாவில் மொத்தமுள்ள, 135 அனல் மின் நிலையங்களில், 80 சதவீதம் அதாவது, 106ல் இருப்பில் உள்ள நிலக்கரி, 5 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என, மத்திய மின்சார ஆணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.'தமிழகத்தில், 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் தேவைப்படும் நிலையில், 60 ஆயிரம் டன் நிலக்கரி வருகிறது. அதனால், தமிழகத்தில் ஒரு வினாடி கூட மின் வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை' என்று மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் விளக்கம் நம்பிக்கை அளிக்கிறது. இருந்தாலும் நிலக்கரி தட்டுப்பாடோ, மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்கான அவசர கால திட்டத்தை தயாரித்து, அரசு செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
13-அக்-202119:26:08 IST Report Abuse
John Miller மக்களுக்கு சேவை செய்து கட்சியை வளர்த்து மகனுக்கு கூட்ட்னானி வைத்து எம்பீ பதவியை அவசரகால திட்டத்தில் வாங்கியது போல், மின்சாரத்தை வாங்க முடியாது ஐயா. நிறைய செலவும், களமும் பிடிக்கும் மின்சாரத்தை தயாரிக்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
13-அக்-202113:43:42 IST Report Abuse
duruvasar மின்கம்பிகளின் மேல் உரசும் மரங்களை வெட்டி சாயிங்கள் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X