பொது செய்தி

இந்தியா

இந்திய - அமெரிக்க கடற்படை தலைமை தளபதிகள் சந்திப்பு

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லி வந்துள்ள அமெரிக்க கடற்படை தலைமை தளபதி அட்மிரல் மைக்கேல் கில்டே, நம் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கை சந்தித்து பேசினார்.அமெரிக்க கடற்படை தலைமை தளபதி அட்மிரல் மைக்கேல் கில்டே, ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின், நம் கடற்படை தலைமை
 இந்திய - அமெரிக்க கடற்படை தலைமை தளபதிகள் சந்திப்பு

புதுடில்லி:டில்லி வந்துள்ள அமெரிக்க கடற்படை தலைமை தளபதி அட்மிரல் மைக்கேல் கில்டே, நம் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கை சந்தித்து பேசினார்.

அமெரிக்க கடற்படை தலைமை தளபதி அட்மிரல் மைக்கேல் கில்டே, ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின், நம் கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங்கை சந்தித்து பேசினார்.இந்தோ - பசிபிக் பாதுகாப்பு நிலவரம் மற்றும் கடல் பகுதி பாதுகாப்பில் இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து மைக்கேல் கில்டே தன், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளதாவது:அமெரிக்க - இந்தியா ராணுவ உறவை வலுப்படுத்தவும், தகவல் பரிமாற்றம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடற்பகுதி ரோந்துப் பணி ஆகியவற்றில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஐந்து நாள் பயணத்தின் போது மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மேற்கு கடற்படை தளம் மற்றும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு படை தளங்களை அமெரிக்க தளபதி மைக்கேல் கில்டே நேரில் பார்வையிடுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X