'ஜாமின்' மனுக்களை தாமதமின்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : அக் 14, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:'தனிநபரின் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. எனவே ஜாமின் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் தாமதமின்றி விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த நபர், குற்ற வழக்கு தொடர்பாக மார்ச்சில் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பஞ்சாப்
'ஜாமின்' மனுக்கள்,விசாரிக்க, சுப்ரீம் கோர்ட், உத்தரவு

புதுடில்லி:'தனிநபரின் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. எனவே ஜாமின் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் தாமதமின்றி விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த நபர், குற்ற வழக்கு தொடர்பாக மார்ச்சில் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு பல மாதங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:குற்றவாளியின் வழக்கு விபரங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. தனிநபரின் சுதந்திரம் என்பது மிகவும் புனிதமானது; முக்கியமானது. எனவே கைதுக்கு முன்போ அல்லது பின்போ தாக்கல் செய்யப்படும் ஜாமின் மனுக்கள் தாமதமின்றி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதற்கான கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
14-அக்-202111:30:20 IST Report Abuse
suresh kumar //தனிநபரின் சுதந்திரம் என்பது மிகவும் புனிதமானது முக்கியமானது.// அதனால்தான் ஜாமின் வழங்கும்போது ஜாமினில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஜாமீன் பெற்றவர் பொதுவெளியில் தாராளமாகவும் அப்பட்டமாகவும் மீறலாம் போல
Rate this:
Cancel
13-அக்-202121:08:40 IST Report Abuse
theruvasagan ஆமாம். இந்திரகுமாரி வழக்குல சுருக்கா தீர்ப்பு வழங்கின ஸ்பீட ஜாமின் விஷயத்திலயும் காட்டணும். இருந்தாலும் அந்த வழக்கை முடிச்சு வச்சது பயங்கர ஓவர்ஸ்பீடுதான்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
13-அக்-202110:40:28 IST Report Abuse
duruvasar அப்போ அந்த வஜ்ரம் , நெத்திலி, வாலை மீன்கள் கதி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X