சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

சோதனை மேல் சோதனை!

Added : அக் 12, 2021
Share
Advertisement
சோதனை மேல் சோதனை!'நமக்கு இணை அமைச்சராக இருப்பவர்கள் எல்லாம் சர்ச்சையில் சிக்குகின்றனரே' என, கவலைப்படுகிறார், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா. பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில், ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு இணை அமைச்சர்களாக, கிரண் ரிஜிஜு, ஹரிபாய் சவுத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.இவர்களால்
 அக்கம் பக்கம்


சோதனை மேல் சோதனை!



'நமக்கு இணை அமைச்சராக இருப்பவர்கள் எல்லாம் சர்ச்சையில் சிக்குகின்றனரே' என, கவலைப்படுகிறார், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா. பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில், ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு இணை அமைச்சர்களாக, கிரண் ரிஜிஜு, ஹரிபாய் சவுத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களால் பெரிய அளவில் எந்த பிரச்னையும் இல்லை. சீனியருக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல், தங்கள் பதவிக் காலத்தை சுமுகமாக நிறைவு செய்தனர். ஆனால், இப்போது அமித் ஷாவுக்கு இணை அமைச்சர்களாக உள்ள நிஷித் பிரமானிக், அஜய் மிஸ்ரா ஆகியோர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். தன் கல்வித் தகுதி குறித்த விஷயத்தில் நிஷித் பிரமானிக் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கினார். எதிர்க்கட்சியினர் அவரை குறி வைத்து தாக்கினர்.
இந்த விஷயம் சுமுகமாக முடிவதற்குள் இப்போது அஜய் மிஸ்ரா பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த கலவரம் தொடர்பாக இவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தால், இவரது அமைச்சர் பதவியும் பறிபோகும் வாய்ப்புள்ளது; இது, அமித் ஷாவுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.'சோதனை மேல் சோதனையாக வருகிறதே; என்ன செய்வது...' என, யோசனையில் ஆழ்ந்துள்ளார் அமித் ஷா.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X