சில வரி செய்திகள்...: இந்தியா

Added : அக் 12, 2021
Share
Advertisement
2 குழந்தைகள் பலி மலப்புரம்: கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை தொடர்கிறது. மலப்புரம் மாவட்டம் கரிப்பூர் அருகே மாதம்குளம் கிராமத்தில் கொட்டிய மழை காரணமாக நேற்று அதிகாலை ஒரு வீடு இடிந்து விழுந்தது. அங்கிருந்த ஆறு மாத கைக்குழந்தை, அவளது 8 வயது சகோதரி ஆகியோர் பலியாகினர். 5 பேர் சிக்கினர்லத்தேகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட ஜன் முக்தி பரிஷத் என்ற

2 குழந்தைகள் பலி

மலப்புரம்: கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை தொடர்கிறது. மலப்புரம் மாவட்டம் கரிப்பூர் அருகே மாதம்குளம் கிராமத்தில் கொட்டிய மழை காரணமாக நேற்று அதிகாலை ஒரு வீடு இடிந்து விழுந்தது. அங்கிருந்த ஆறு மாத கைக்குழந்தை, அவளது 8 வயது சகோதரி ஆகியோர் பலியாகினர்.

5 பேர் சிக்கினர்

லத்தேகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட ஜன் முக்தி பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், லத்தேஹர் மாவட்ட வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அங்கு விரைந்த போலீசார், அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

நக்சல்கள் சுட்டுக்கொலை

புவனேஸ்வர்: ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டம் துளசி வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

மாணவர்களுக்கு கொரோனா

ஜுனாகத்: குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிக்கப்பட்டதுடன், அங்கு பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

அதிகாரி வீட்டில் சோதனை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவின் ஆலோகராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பஷீர் கான். ஆயுதங்களுக்கான உரிமம் வழங்கிய வழக்கில் அவர் சிக்கியதால், ஆலோசகர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பசீர் கானின் வீடு உட்பட டில்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இதில் வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X