எம்.பி.,க்களுக்கு உரிய சலுகை விமான நிறுவனங்களுக்கு உத்தரவு| Dinamalar

எம்.பி.,க்களுக்கு உரிய சலுகை விமான நிறுவனங்களுக்கு உத்தரவு

Added : அக் 12, 2021
Share
புதுடில்லி:'விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் எம்.பி.,க்களுக்கு உரிய சலுகைகள் வழங்கும் நடைமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்' என, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எம்.பி.,க்களுக்கு விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் சில சலுகைகள், முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை முறைப்படி நடைமுறைபடுத்தப்பட வில்லை என, பல புகார்கள்

புதுடில்லி:'விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் எம்.பி.,க்களுக்கு உரிய சலுகைகள் வழங்கும் நடைமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்' என, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எம்.பி.,க்களுக்கு விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் சில சலுகைகள், முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை முறைப்படி நடைமுறைபடுத்தப்பட வில்லை என, பல புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்.பி.,க்களுக்கு சில சலுகைகள், முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அது முழுமையாக நடைமுறைபடுத்தப்படவில்லை என புகார்கள் வந்துள்ளன.ஏற்கனவே வழங்கப் பட்டு உள்ள நடைமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி.,க்கள் விமான நிலையங்களில் ஓய்வறைகளை பயன்படுத்த எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவர்களுக்கு, டீ, காபி, குடிநீர் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும். விமான நிலையங்களில் வி.ஐ.பி.,க்கள் கார் நிறுத்தும் இடங்களில் கார்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும்.விமானங்களில் விரும்பிய இருக்கைகள், காலியாக இருக்கும் பட்சத்தில் எம்.பி.,க்களுக்கு ஒதுக்கி தர வேண்டும்.விமானத்தின் முன் வரிசையில் அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பது போன்ற சலுகைகள் நடைமுறையில் உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X