மனித உரிமையில் அரசியல் செய்வதா: பிரதமர் மோடி வேதனை

Updated : அக் 14, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (5+ 15)
Share
Advertisement
புதுடில்லி:''மனித உரிமை என்பதை சிலர் அரசியல் லாப, நஷ்ட கணக்கை வைத்தே பார்க்கின்றனர். இதனால், சர்வதேச அரங்கில் நம் நாட்டின் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அனைவருடன்
மனித உரிமை, அரசியல்,பிரதமர்  , மோடி வேதனை

புதுடில்லி:''மனித உரிமை என்பதை சிலர் அரசியல் லாப, நஷ்ட கணக்கை வைத்தே பார்க்கின்றனர். இதனால், சர்வதேச அரங்கில் நம் நாட்டின் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக என்பதே இந்த அரசின் குறிக்கோள்; இது, அனைவரின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

மனித உரிமைகள் விஷயத்தில் தேர்ந்தெடுத்து சிலர் அரசியல் செயல்கின்றனர். ஒரு சில சம்பவங்களில் மனித உரிமை மீறப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், மற்றொரு சம்பவத்தில் அதைப் பற்றியே அவர்கள் பேசுவதில்லை.மனித உரிமை என்ற பெயரில் நம் நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்த அந்த சிலர் முயற்சிக்கின்றனர். மனித உரிமைப் பிரச்னையை அவர்கள் அரசியல் என்ற கண்ணாடி வாயிலாக பார்க்கின்றனர்.

அரசியல் லாப, நஷ்டத்துக்காக இவ்வாறு பாரபட்சமாக சிலர் செயல்படுவது சர்வதேச அரங்கில் நம் நாட்டின் பெருமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


புதிய நடைமுறை!புதிய நடைமுறை!
இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேச அமைப்புகளின் துாண்டுதலில் குற்றஞ்சாட்டுவது என்பது நம் நாட்டில் புதிய நடைமுறையாக மாறியுள்ளது. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம், ஜம்மு - காஷ்மீரில் புதிய சகாப்தத்தை, உள்துறை அமைச்சர் அமித் ஷா படைத்துள்ளார்.நீதிபதி அருண் மிஸ்ரா தலைவர், தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்மனித உரிமை நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:நீண்ட இடைவெளிக்குப் பின், தனிப் பெரும்பான்மை பலத்துடன் 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., அரசு அமைந்தது. பதவியேற்றது முதல் அரசு செயல்படுத்தி வரும் ஒவ்வொரு திட்டமும் மனித உரிமையை பாதுகாப்பதாகவே அமைந்துள்ளது.

நாடு முழுதும் 10 கோடி குடும்பத்துக்கு கழிப்பறை வழங்கப்பட்டுள்ளது. நான்கு கோடி குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளது. 13 கோடி குடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரண்டு கோடி குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. மேலும் ஐந்து கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இவை அனைத்துமே மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளே.

தேசிய மனித உரிமை கமிஷன் இதுவரை 20 லட்சம் வழக்குகளை விசாரித்து 205 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மனித உரிமையை பாதுகாக்க அந்த அமைப்பு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
13-அக்-202118:17:57 IST Report Abuse
Kumar 2006 இல் இருந்து 2011 வரை தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாத்தால் அழிந்து போன தொழில்கள் எத்தனை? தற்கொலை செய்த விவசாயிகள் எத்தனை? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
13-அக்-202116:39:53 IST Report Abuse
Duruvesan Moorkan paavadais happy😂
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
13-அக்-202113:46:56 IST Report Abuse
radha மனித உரிமையில் அரசியல் செய்வதா: பிரதமர் மோடி வேதனை ( அதைத்தானே எஜமான் நாங்களும் உங்ககிட்ட கேட்கிறோம்.)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X