பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதாவின் முதல் படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்

Updated : அக் 12, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை : பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் (82), சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமான வெண்ணிறாடை படத்தில் ஹீரோவாக நடித்தவர் இவர் தான். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 50 படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.நடிகர் ஸ்ரீகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து

சென்னை : பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் (82), சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமான வெண்ணிறாடை படத்தில் ஹீரோவாக நடித்தவர் இவர் தான். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 50 படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.latest tamil newsநடிகர் ஸ்ரீகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போதிருந்தே மேடை நாடகங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்த ஸ்ரீகாந்துக்கு 1964-ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய "வெண்ணிறாடை" பட வாய்ப்பு கிடைத்து திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அவர் ஏற்று நடித்த டாக்டர் சந்துரு என்ற கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்திருப்பார். இந்தப் படம் இவருக்கு மட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகை வெண்ணிறாடைநிர்மலா மற்றும் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோருக்கும் முதல் படமாக அமைந்தது.
மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து நாடகத் துறையில் இவர் பிரபலமாக இருந்ததால் தனது சொந்தப் பெயரான வெங்கட்ராமன் என்ற பெயரை பயன்படுத்தாமல் ஸ்ரீகாந்த் என்ற பெயரிலேயே சினிமாவிலும் நடிக்கலானார். "வெண்ணிறாடை" படத்திற்கு பிறகு இவருக்கு பெரும்பாலும் குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களே கிடைத்து என்றே சொல்லலாம். இருப்பினும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.


latest tamil newsஅதேசமயம் தன்னால் எந்த கதாபாத்திரமும் ஏற்று நடித்து அதற்கு பெருமை சேர்க்க முடியும் என்று நிரூபித்தவர் ஸ்ரீகாந்த். குறிப்பாக "எதிர் நீச்சல்" "பூவா தலையா" "பாமா விஜயம்" நவகிரகம் மற்றும் "காசேதான் கடவுளடா" போன்ற படங்களை இவருடைய நகைச்சுவை நடிப்பிற்கு சான்றாக கூறலாம். 1972 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "அவள்" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த நடிகர் ஸ்ரீகாந்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த தங்கப்பதக்கம் திரைப்படம் இவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் எனலாம்.


latest tamil news


Advertisementlatest tamil news
latest tamil newsஇந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த "ஜெகன்" என்ற கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களான "சில நேரங்களில் சில மனிதர்கள்" "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" "கருணை உள்ளம்" போன்ற படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த முக்கிய வேடமேற்று நடித்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.


latest tamil newsசிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை மிக்கவர். இதுவரை இவர் எம்.ஜி.ஆரோடு மட்டும் இணைந்து நடிக்கவில்லை என்பது முக்கியமான ஒன்று.


latest tamil news
latest tamil newsஇயக்குநர் ஸ்ரீதர் தொடங்கி கே.பாலசந்தர், ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், முக்தா ஸ்ரீனிவாசன், பி.மாதவன், கிருஷ்ணன் பஞ்சு மற்றும் எம்.ஏ.திருமுகம் என அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணியாற்றிய சிறப்பு பெற்றவர். சுமார் 200 படங்கள் வரை நடித்திருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் நடிகர் என்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதிக்கு சொந்தக்காரர் என்பது மட்டும் உண்மை.

ஸ்ரீகாந்த்திற்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். சென்னையில் அவருடன் வசித்து வந்தார். நண்பகல் வாக்கில் அவர் இறந்துள்ளார். மாலையிலேயே அவரது இறுதிச்சடங்கு தேனாம்பேட்டையில் உள்ள மயானத்தில் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-202117:33:18 IST Report Abuse
Bhaskaran Avarkudumbathinaraal sariyaaga kavanikapadaamal mayilai saaibaabaa aalayathil amarnthirunthaar piragu alaithu senraargal
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
13-அக்-202113:27:46 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy ஓம் ஷாந்தி அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
13-அக்-202112:18:16 IST Report Abuse
Anand ஆழ்ந்த இரங்கல்கள்.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X