ஜனாதிபதியை சந்திக்க காங்., தலைவர்கள் முடிவு

Updated : அக் 13, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (2+ 19)
Share
Advertisement
புதுடில்லி:'லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என கோரி, ராகுல், பிரியங்கா உட்பட காங்., தலைவர்கள் ஜனாதிபதியை இன்று சந்திக்க உள்ளனர். உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன்
 ஜனாதிபதி,சந்திக்க காங்., தலைவர்கள் முடிவு

புதுடில்லி:'லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என கோரி, ராகுல், பிரியங்கா உட்பட காங்., தலைவர்கள் ஜனாதிபதியை இன்று சந்திக்க உள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைதாகி உள்ளார். 'கலவரத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும்' என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறி உள்ளது.

இதற்கிடையே லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக காங்., கட்சியின் ஏழு பேர் குழு ஜனாதிபதியை இன்று சந்திக்க உள்ளது.கட்சியின் முன்னாள் தலைவரான எம்.பி., ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

'வன்முறை வழக்கில் மகன் கைதான நிலையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை வைக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
13-அக்-202110:38:50 IST Report Abuse
duruvasar தகாத செயல் பாபு கிட்ட சொல்லிபாருங்களேன். ஏதாவது செயலில் ஈடுபடிவதில் கெட்டிக்காரரு.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-அக்-202106:56:33 IST Report Abuse
Kasimani Baskaran வன்முறைக்கு தூபம் போட்ட காங்கிரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X