டில்லியில் பதுங்கி இருந்த பாக்., பயங்கரவாதி கைது

Added : அக் 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:போலி ஆவணங்களை பயன்படுத்தி டில்லியில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை,போலீசார் கைது செய்தனர்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தசரா பண்டிகையை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைகளை துவங்கி உள்ளனர்.
 டில்லியில் பதுங்கி இருந்த பாக்., பயங்கரவாதி கைது

புதுடில்லி:போலி ஆவணங்களை பயன்படுத்தி டில்லியில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை,போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தசரா பண்டிகையை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைகளை துவங்கி உள்ளனர். டில்லியின் கிழக்கு பகுதியில் உள்ள லட்சுமி நகரில் முகமது அஷ்ரப் அலி என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு 'ஏகே' ரக துப்பாக்கி, நவீன கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன. அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது முகமது அஷ்ரப் அலி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நரோவல் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.போலி ஆவணங்களை பயன்படுத்தி டில்லியில் தங்கியிருந்த அவர் பாக்., பயங்கரவாதிகளின் 'ஸ்லீப்பர் செல்' எனப்படும் உளவுத்துறையாக செயல்பட்டது உறுதியானது. அவரை போலீசார் கைது செய்தனர்.

''போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பண்டிகை காலத்தில் தலைநகரில் நடக்கவிருந்த பயங்கரவாத செயல் தடுக்கப்பட்டு உள்ளது,'' என போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X