பிரதமரின் ஆலோசகராக அமித் கரே நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமரின் ஆலோசகராக அமித் கரே நியமனம்

Added : அக் 12, 2021
Share
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார்.மத்திய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரே. அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரே. அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியது மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை சார்பில், 'டிஜிட்டல் மீடியா' விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர், அமித் கரே.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X