சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்திகர்ப்பமாக இருந்த போது கொரோனா பாதித்து குணமடைந்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என லண்டன் கிங்ஸ் கல்லுாரி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கர்ப்ப மாதங்களில் கொரோனா பாதித்த பெண்களுக்கு பிறந்த 30 குழந்தைகளை ஆய்வு செய்த போது, கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு


குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி



கர்ப்பமாக இருந்த போது கொரோனா பாதித்து குணமடைந்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என லண்டன் கிங்ஸ் கல்லுாரி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கர்ப்ப மாதங்களில் கொரோனா பாதித்த பெண்களுக்கு பிறந்த 30 குழந்தைகளை ஆய்வு செய்த போது, கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு உருவான நோய் எதிர்ப்பு சக்தி, நஞ்சுக்கொடி மூலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சென்றடைந்து அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.


தகவல் சுரங்கம்



பேரழிவு தடுப்பு தினம்

பூகம்பம், வறட்சி, சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு முன்னெச்சரிக்கை, மீட்பு கட்டமைப்பு களை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 2009 முதல் அக்.13ல் சர்வதேச பேரழிவு குறைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை பேரழிவு, உயிரிழப்பை மட்டுமல்லாமல் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துவதால் பொருளா தாரமும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், இயற்கையை பாதுகாக்கும் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்த வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X