பொது செய்தி

தமிழ்நாடு

பொய் புகாரில் வஞ்சம் தீர்க்கும் சார் - பதிவாளர்கள்!

Updated : அக் 14, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
தமிழக பத்திரப்பதிவு துறை வாயிலாக, அரசுக்குஅதிக வருமானம் வருகிறது. ஆனால், அந்த துறையின் தலை முதல் வால் வரை லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டு உண்டு. தற்போது, முறைகேடுகளை குறைக்க, அத்துறையை முழுமையாக கணினி மயமாக்கி இருப்பதோடு, எல்லாவற்றிலும் வெளிப்படை தன்மையோடு செயல்பட, அரசு அறிவுறுத்தியுள்ளது.ஆனாலும், முறைகேடுகள் கொஞ்சமும்
 பொய் புகார். வஞ்சம் தீர்க்கும் சார் - பதிவாளர்கள்!

தமிழக பத்திரப்பதிவு துறை வாயிலாக, அரசுக்குஅதிக வருமானம் வருகிறது. ஆனால், அந்த துறையின் தலை முதல் வால் வரை லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டு உண்டு.

தற்போது, முறைகேடுகளை குறைக்க, அத்துறையை முழுமையாக கணினி மயமாக்கி இருப்பதோடு, எல்லாவற்றிலும் வெளிப்படை தன்மையோடு செயல்பட, அரசு அறிவுறுத்தியுள்ளது.ஆனாலும், முறைகேடுகள் கொஞ்சமும் குறைவில்லாமல் நடக்கின்றன. அதிர்ச்சிநீர் நிலைகள், புறம்போக்கு நிலங்கள், கேட்பார் இல்லாமல் இருக்கும் இடங்கள் போன்றவற்றுக்கு, போலி ஆவணங்கள் தயார் செய்து, அதை வைத்து பத்திர பதிவு செய்வது, பெரும்பாலான பதிவு அலுவலங்களில் அன்றாடம் நடக்கிறது.

இது தொடர்பாக, ஏகப்பட்ட புகார்களும் பதிவு துறை அலுவலகத்துக்கு வருகின்றன. இதை வைத்து, குறிப்பிட்ட சில பதிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போனால், குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த அவர்கள், தங்களுக்கான சிறப்பு சட்டம் என்ற அஸ்திரத்தை பயன்படுத்தி, உயர் அதிகாரிகளை மிரட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:சில இடங்களில் நடந்த சம்பவங்களை மட்டும் உதாரணமாக சொல்கிறோம். தமிழகத்தின் மத்திய மண்டலத்தில் இருக்கும் ஒரு சார் பதிவாளர் அவர். அவர் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. அரசின் வழிகாட்டி மதிப்புப்படி கட்டணத்தை செலுத்தி, பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.ஆனால், அரசின் வழிகாட்டி மதிப்பை குறைத்து, குறைந்த கட்டணம் செலுத்த கூறி, ஏராளமான பத்திர பதிவுகளை செய்துள்ளார்.


நடவடிக்கைஇதனால், அரசுக்கானவருமான இழப்பு, கோடிக்கணக்கான ரூபாய். இதுபோன்ற தவறுகளை தணிக்கை செய்து கண்டறிய,துறையில் தனி ஆட்கள் இருக்கின்றனர். அவர்கள் ஆண்டுக்கு மூன்று முறை, ஒவ்வொரு பதிவு அலுவலகத்திலும் பதிவாகும் பத்திரங்களை சோதிப்பர். இப்படி சோதித்ததில், குறிப்பிட்ட அந்த சார் - பதிவாளரின் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, பதிவுத் துறை சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு துறையிலும், அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் சென்ற நிலையில், அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இதையடுத்து, அந்த சார் - பதிவாளர் தன் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பழி வாங்கவும், நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும், சிறப்பு அஸ்திரத்தை கையில் எடுத்தார். குறிப்பிட்ட பிரிவினரை பழித்து பேசினால், நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்டிருக்கும்,

'நோடல்' அமைப்பிடம், 'உயர் அதிகாரி, சில சொற்களால் என்னை அவமானப்படுத்தி விட்டார்; அதோடு, நான் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என்பதால், என் மீது பொய் குற்றச் சாட்டுக்களை சுமத்தி நடவடிக்கை எடுக்கிறார்' என்று புகார் கொடுத்தார். நோடல் அதிகாரிகள், உயர் அதிகாரியிடம் விசாரித்தனர். பொய் குற்றச்சாட்டு தான் என்றாலும், விசாரணை என்ற பெயரில் தலைக்குனிவை சந்திக்கிறோமே என வெம்பிய உயர் அதிகாரி, குறிப்பிட்ட சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்கி விட்டார்.

இதேபோலவே, சென்னையில் இருக்கும் ஒரு பெண் உயர் அதிகாரி மீதும் புகார் கிளம்பியது. அவர் தற்போது, சார் பதிவாளரையும் கடந்து, உயர் பொறுப்பில் உள்ளார். அவர் ஏற்கனவே மாவட்ட பதிவாளராக இருந்த கால கட்டங்களில், வேளச்சேரி மற்றும்பள்ளிக்கரணை ஏரி முழுவதையும் போலி பட்டா போட்டு கொடுத்தவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையிலே பணியாற்றி வருகிறார்.


தடுமாற்றம்

அவரும், குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர். அவர் மீதும் புகார்கள் அடிப்படையில், சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உடனே, சிறப்பு அஸ்திரத்தை கையில் எடுத்து, உயர் அதிகாரிகள் மீது புகார் கொடுக்க அதிகாரிகள் பின்வாங்கினர்.இதில் என்ன வேடிக்கை என்றால், இப்படிப்பட்ட பிரிவினர் குறித்த புகார்களை விசாரிக்கும் குழுவிலும், அந்த அதிகாரி வந்து, உட்கார்ந்து விட்டது தான்.

தமிழகத்தின் பல பதிவு அலுவலகங்களிலும், குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த சார் - பதிவாளர்களே உள்ளதால், அவர்கள் துணிந்து செய்யும் தவறுகள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாமல், துறையின் உயர் அதிகாரிகள் தடுமாறுகின்றனர். குறிப்பிட்ட அந்த பிரிவை சேராத பலரும் செய்யும் தவறுகள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முயற்சிக்கும் போதும், அந்த அதிகாரிகளுக்கு வேறு விதத்தில் சிக்கல்கள் வருகின்றன.

குறிப்பிட்ட பிரிவை சேராத சார் - பதிவாளர்களுக்கு சிக்கல் என்றதும், அவர்கள் பிரிவை சேர்ந்த அதிகாரிகளோடு இருக்கும் நட்பை பயன்படுத்தி, அவர்கள் வாயிலாக, நோடல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கின்றனர். இதனால், தவறு செய்யும் அதிகாரிகள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல், உயர் அதிகாரிகள் தடுமாற்றத்தில் உள்ளனர். உணர்வுபூர்வமான பிரச்னை என்பதால், வெளியிலும் சொல்ல முடியவில்லை.


வேதனைபோலி ஆவணங்கள் வாயிலாக பதிவு செய்யப்படும் இடங்கள் அனைத்தும், வங்கிகளில் அடமானமாக வைத்து கடன் பெறப்படுகிறது. சென்னையில் மட்டும் போலி ஆவணங்களை அடமானம் வைத்து பெறப்பட்ட தொகை மட்டும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, பதிவு துறை செயல்பாட்டை சீராக்க, உயர் அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், அவற்றை சிறப்பு சட்ட பாதுகாப்பு துணை கொண்டு தடுத்து வருகின்றனர்.

சமீப காலமாக, தங்கள் பிரிவை சேர்ந்த ஒரு தலைவர் பெயரை கூறி, பணம் வசூலிக்கும் குறிப்பிட்ட சில சார் -பதிவாளர்கள், கலப்பு திருமணங்களை பதிவு செய்வதில், அதிக கவனம் செலுத்துகின்றனர்.ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு, இந்த தகவல் கூறப்பட்டும், அவர்களும் கண்டும் காணாதது போல இருப்பதுதான் வேதனை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


'அரசு தான் முடிவு கட்ட வேண்டும்!'இந்த தகவல்கள், எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு சில அதிகாரிகள், மேலிட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, உயர் அதிகாரிகள் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். அதை எதிர்கொண்டு, குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் முயற்சியில், உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொய் புகார் கண்டு யாரும் அஞ்சவில்லை. லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுத்தால், அவர்கள் மீது இப்படி பொய் புகார் கொடுக்க முடியுமா?உயர் அதிகாரிகளுக்கு கீழ்நிலை அதிகாரிகளால், இப்படிப்பட்ட சிக்கல் இருப்பது, ஆட்சி மேலிடத்திற்கு சென்றுள்ளது. அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என காத்திருக்கிறோம். கடும் நடவடிக்கை எடுத்தால் தான், கீழ்நிலையில் நிகழும் தவறுகளும், முறைகேடுகளும் முழுமையாக தடுக்கப்படும்.

குறிப்பிட்ட பிரிவு என்ற சிறப்பு சட்ட ஆயுதத்தை கேடயமாகப் பயன்படுத்தி செய்யும் தவறுகளுக்கு, அரசு தான் முடிவு கட்ட வேண்டும். - பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரி

-- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
13-அக்-202121:16:55 IST Report Abuse
Ram திராவிட கொள்கையும் இடவொதுக்கீடும் அந்த குறிப்பிட பிரிவினருக்கு அதிக சட்டப்பாதுகாப்பும் இருக்கும் வரை நாடு
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
13-அக்-202113:37:50 IST Report Abuse
தமிழ்வேள் ரிசர்வேஷன் முறை அடியோடு ஒழிக்கப்படும் வரை இந்த பிரச்சினை இருக்கும் .புகார் கொடுக்கும் அதிகாரி ,உண்மையிலேயே 'குறிப்பிட்ட' பிரிவை சார்ந்தவரா ? அல்லது போலி சாதி சான்றிதழ் கொடுத்து குறிப்பிட்ட பிரிவாக கணக்கு காட்டி பணியில் சேர்ந்தவரா ? என்பதை விசாரிக்கவேண்டும் ...ஒரிஜினல்களை விட டூப்ளிகேட் களுக்கே சாதி வெறி அதிகம் .......குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான வன்கொடுமை தடுப்பு போலி சட்டம் மீண்டும் சீராய்வு செய்யப்பட்டு , இயன்றால் முற்றிலும் கைவிடப்படவேண்டும் ....இந்த சட்டம் பெரும்பாலும் அயோக்கியர்களை பாதுகாப்பதற்காகவே இருக்கிறது ....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
13-அக்-202111:15:07 IST Report Abuse
raja அடங்க மரு அத்து மீறு கூட்டம்தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X